அது யாரு.. பாவனி அக்கா.. அபிஷேக் பதிலைக்கேட்டு விழுந்து விழுந்து சிரிச்ச அண்ணாச்சி
சென்னை: பாவனியின் மடியில் படுத்துக் கொண்டிருந்த அபிஷேக் ராஜாவிடம் அது யாரு என கேட்டதற்கு அக்கா என பதிலளித்ததை அடுத்து இமான் அண்ணாச்சி விழுந்து விழுந்து சிரித்தார்.
Recommended Video
நம் வீட்டில் எப்படி பாசம், அன்பு, நேசம் என ஒரு பிணைப்புடன் செயல்படுகிறோமோ அது போல் பிக்பாஸ் வீட்டில் அவரவர் வயதிற்கேற்ப அக்கா, தம்பி, தங்கை, அண்ணன், அம்மா, அப்பா, தாத்தா என அழைத்துக் கொள்கிறார்கள்.
ஒவ்வொரு சீசனிலும் அப்படித்தான். இந்த உறவுகளுக்கு மத்தியில் காதல் ஜோடிகளும் தனி ரூட்டில் பயணம் செய்வார்.

பாவனி ரெட்டி
இந்த நிகழ்ச்சியில் வந்த முதல் நாளன்றே தனது காதல் கணவர் தற்கொலை சம்பவத்தை கூறி மக்களின் மனதில் இடம் பிடித்தவர் பாவனி ரெட்டி. இவர் சில படங்களிலும் டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார். இவர் 2016 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் பிரதீப்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ஹைதராபாத்
இந்த நிலையில் 2017ஆம் ஆண்டு பிரதீப் ஹைதராபாத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தின் போது தனக்கு அழுகை வரவில்லை. மாறாக கோபம்தான் வந்தது என தனது காதல் கதையை கண்ணீருடன் தெரிவித்தார் பாவனி ரெட்டி. அவரை மற்ற போட்டியாளர்கள் தேற்றினர்.

அண்ணாச்சி
இந்த வீட்டில் பெரிய அண்ணன் என்றால் அது இமான் அண்ணாச்சி, அவரை எல்லாரும் அண்ணாச்சி என்றும் அண்ணா என்றும் அழைத்து வருகிறார்கள். இந்த பிக்பாஸில் யூடியூபர் அபிஷேக் ராஜா அனைவரையும் கலாய்த்து வருகிறார். பாவனியுடன் அக்கா அக்கா என பழகி வருகிறார். அது போல் இசைவாணி இவரை அண்ணா என்று அழைத்து வருகிறார்.

தலையணை
நேற்று எபிசோட்டில் பாவனி மடியில் தலையணை வைத்து கொண்டு அபிஷேக் படுத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இமான் அண்ணாச்சி, அபிஷேக்கிடம் அது யாரு என கேட்டார். அதற்கு அபிஷேக் பாவனி அக்கா என்றார். உடனே இமான் அண்ணாச்சி விழுந்து விழுந்து சிரித்தார். இது ஏன் என தெரியவில்லை. பாவனி அல்லது பவானி என பெயரை மாற்றி சொல்லியதற்காக சிரித்தாரா என தெரியவில்லை.
-
சிறகடிக்க ஆசை: சத்யாவை நினைத்து சந்தோஷப்பட்ட விஜயா.. ஆனால் முத்து குடும்பத்திற்கு செக் வைத்த ரோகிணி.. அதிரடி சம்பவம் -
சிறகடிக்க ஆசை: பட்டும் திருந்தாத விஜயா.. அசிங்கப்படுத்தும் மனோஜ்! முத்துக்கு வெற்றி மேல் வெற்றி.. செம சம்பவம் -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications