இன்னும் ஆறே மணி நேரம்தான்! பட்டென வலுவிழக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. இந்திய வானிலை மையம்
சென்னை: வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டு இருந்த நிலையில், இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவல்களைப் பகிர்ந்து உள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. இந்தாண்டு பருவமழை வழக்கமாகவே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையங்கள் கணித்துள்ளன.
எப்போதும் சென்னை உட்பட தமிழ்நாட்டின் வடக்கு மாவட்டங்களுக்கு வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் அதிகப்படியான மழை பெய்யும் என்பதால் இந்த பருவமழை ரொம்பவே முக்கியம்.

வானிலை
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வடகிழக்கு பருவமழை தொடங்கியது. பருவமழை தொடங்கிய சில நாட்களில் சென்னையில் கனமழை வெளுத்து வாங்கியது. அப்போது சென்னையில் தொடர்ச்சியாக சில நாட்கள் கனமழை வெளுத்து வாங்கியது. அதேபோல சீர்காழி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை காரணமாகப் பாதிப்புகள் சற்று மோசமாகவே ஏற்பட்டு இருந்தது.

இந்திய வானிலை ஆய்வு மையம்
இந்தச் சூழலில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி கடந்த சில நாட்களுக்கு முன்பு, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. தென்கிழக்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மெல்ல நகர்ந்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் வடக்கு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.

வலுவிழக்கும்
இருப்பினும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ரொம்பவே மெதுவாகக் கரையை நோக்கி நகர்ந்து வந்ததால், பெரியளவில் மழை பெய்யவில்லை. ஏற்கனவே, இன்றைய தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று வலுவிழக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

அடுத்த 6 மணி நேரம்
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 6 மணி நேரத்தில் வலுவிழக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. சென்னைக்கு அருகே 130 கிலோ மீட்டர் தொலைவில் இப்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவும் நிலையில், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த சில மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம்
முன்னதாக இன்றைய தினம் வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகள், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications