தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் தென்மேற்கு பருவ காற்று மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்பட 8 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் மழைக்கான வாய்ப்புகள் குறித்தும், சென்னையில் எப்படி இருக்கும் என்பது குறித்தும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தென்மேற்கு பருவ காற்று
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென்மேற்கு பருவ காற்று மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகம், வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

எங்கெல்லாம் மழை
இதேபோல் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம் புதுவை மற்றும காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இலேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தர்மபுரி, சேலம், நாமக்கல் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை வானிலை
சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பபடும். நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இலேசான மழை பெய்யக்கூடும். சென்னையில் அதிகபட்ச வெப்பப நிலை 38 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்ப நிலை சென்னையில் 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில்
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் 7 செ.மீ மழையும், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 5 செமீ மழையும், திருவள்ளூர் மாவட்டம் திருவிலாங்காட்டில், பள்ளிப்பட்டில் தலா 4 செ.மீ மழையும் பெய்துள்ளது. விழுப்பரம் மாவட்டம் திண்டிவனத்தில் மற்றும் நீலகிரி மாவட்டம் தேவலாவில் தலா 3 செமீ மழையும் பெய்துள்ளது.

கடலுக்கு போக வேண்டாம்
ஜூன் 23 மற்றும் 24ம் தேதிகளில் தென்மேற்கு வங்ககடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40- 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசும். ஜூன் 25ம் தேதி லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40- 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசும். ஜூன் 26ம் தேதி தென் தமிழக கடலோர பகுதி மற்றும் கேரளா மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40- 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசும். ஜூன் 26 மற்றும் 27ம் தேதிகளில் கேரளா மற்றும் கர்நாடகாவில் சூறாவளி காற்று மணிக்கு 40- 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசும். ஜூன் 23 முதல் ஜூன் 27 வரை, தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50- 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசும். மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்" இவ்வாறு வானிலை மையம் கூறியுள்ளது. ஜூன் மாதத்தில் கரூரை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் மழை பொழிவு வழக்கத்தை விட மிக குறைவாகவே உள்ளது.
-
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. விடாமல் வெளுக்க போகுது மழை.. வானிலை மையம் எச்சரிக்கை! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்?












Click it and Unblock the Notifications