கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்ட மக்களே உஷார்..வெளுக்கப்போகும் கனமழை..எச்சரிக்கும் வானிலை
சென்னை: கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சிவகங்கை,புதுக்கோட்டை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்னும் கத்தரி வெயில் காலம் நாளை 4ஆம் தேதி வியாழக்கிழமை முதல் தொடங்குகிறது. இம்மாதம் 29ஆம் தேதி வரை நீடிக்கிறது. கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் அக்னி வெயிலின் அனலை தணிக்க கோடை மழை கொட்டி வருவதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர். மதுரை, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட பல ஊர்களில் நேற்றைய தினம் கனமழை கொட்டியது. இடி மின்னலுடன் கொட்டிய மழையால் பல ஊர்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.

இந்த நிலையில் இன்றைய தினம் கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்ப உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஓரிரு இடங்களில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் 7ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மழை பற்றிய அறிவிப்பு ஒருபக்கம் மகிழ்ச்சியை அளித்தாலும் வரும் 5ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மே 6ம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும் என்றும் வங்கக்கடலில் வரும் 8ம் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே!












Click it and Unblock the Notifications