தமிழக மீனவர்கள் கைது..வாழ்வாதாரம் பாதிப்பு..உடனடியாக விடுவிக்க மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கை கடற்படையினர் அவ்வப்போது எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை கைது செய்து வருகின்றனர்.
மேலும் தமிழக மீனவர்களின் படகுகளையும் அவர்கள் பறிமுதல் செய்துகொள்கின்றனர்.

தமிழக மீனவர்கள் கைது
நீண்ட நாட்களாக இதே வேலையில் ஈடுபட்டு வரும் இலங்கை கடற்படைக்கு தொடர்ந்து பலர் எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டு தான் இருக்கின்றனர். இந்த நிலையில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த 22-ம் தேதி அன்று 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். இலங்கை கடற்படையினர் கைது செய்த மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு மீனவர்களின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

மு.க ஸ்டாலின் கடிதம்
இந்த நிலையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், படகுகளை மீட்கும் விவகாரத்தில் அதன் உரிமையாளர்கள் நேரில் ஆஜராகும் நடவடிக்கையை தளர்த்துமாறும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெஸ்சங்கருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியிருப்பதாவது:- கடந்த மாதம் 22-ம் தேதி அன்று நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் இருந்து மீன்பிடிக்க சென்ற 10 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நிபந்தனையின் பேரில்தான்
இது கடந்த ஜூன் மாதத்தில் இருந்து மட்டும் தொடர்ச்சியாக நடைபெறும் 5-வது நிகழ்வு ஆகும். இலங்கை கடற்படையினரின் இத்தகைய நடவடிக்கைகள் மீனவர்களின் வாழ்வாதாரத்தை வெகுவாக பாதித்துள்ளது. இலங்கை கடற்படையினால் இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களின் 94 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அந்த படகுகளின் உரிமையாளர்கள் இலங்கை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி தங்களது படகிற்கான உரிமையை கோர வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில்தான் கைது செய்யப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்

விடுவிக்க நடவடிக்கை
ஆனால் தற்போது இலங்கையில் நிலவி வரும் சூழ்நிலையால் அவர்கள் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க ஸ்டாலின் அந்த கடிதத்தில் கூறியிருந்தார்.
-
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது?












Click it and Unblock the Notifications