தமிழ்நாட்டில் இந்த 10 மாவட்டங்களில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு.. 3 மாதங்களில் 70 சதவீதம் உயர்வு
நோய் எதிர்ப்பு சக்தி 10 மாவட்டங்களில் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது
சென்னை: நோய் எதிர்ப்பு சக்தி குறைந்ததாக சொல்லப்பட்ட தமிழகத்தின் 10 மாவட்டங்களில் தீவிர நடவடிக்கை எடுத்ததன் காரணமாக, 3 மாதங்களுக்கு பிறகு நோய் எதிர்ப்பு சக்தி மீண்டும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
4 மாதங்களுக்கு முன்பு வரை தமிழ்நாட்டில் தொற்று பாதிப்பு அதிகமாக இருந்தது.. இதற்கு காரணம், 2வது அலை பரவல் வீரியம் மிக்கதாக இருந்தது.. எனவே, பலரையும் பலி கொண்டது.
இது மக்களுக்கு கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தியது.. எனினும், அரசின் தீவிர நடவடிக்கையால் கடந்த ஜுன் மாதம் தொற்று கட்டுப்படுத்தப்பட்டது..

நடவடிக்கை
தற்போது 3வது அலை பலவல் வரப்போவதாக டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.. அந்த வகையில் கோவையில் நோய் தொற்று தாக்கம் அதிகரிக்க கூடும் என்றும் ஏற்கனவே தெரிவித்துள்ளனர்.. எனவே, அதற்கான தடுப்பு நடவடிக்கைகளையும் மாநில அரசு கையில் எடுத்துள்ளது.

ஐசிஎம்ஆர்
இந்நிலையில், நோய் தொற்றுக்கு ஆளானவர்களை ஆய்வு செய்யும் பணி ஜுலை மாதம் நடத்தப்பட்டது.. அப்போது, ஐசிஎம்ஆர் என்று சொல்லப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமானது, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் செரோ என்ற சர்வே ஆய்வை மேற்கொண்டது.. 22 ஆயிரம் பேருக்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நோய் எதிர்ப்பு சக்தி பெரும்பாலான மாவட்டங்களில் இருந்தது தெரிய வந்தது.

சென்னை
குறிப்பாக, சென்னையில் 94 சதவீதம் நோய் எதிர்ப்பு சக்தி இருந்தது.. திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் 96 சதவீதமும் இருந்தது.. ஆனால், கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருந்தது... அதாவது 50 சதவீதத்துக்கு குறைவாகவே நோய் எதிர்ப்பு சக்தி இருந்தது தெரிய வந்தது. அதனால் அந்த மாவட்டங்களில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது... மற்றொரு பக்கம் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது.

10 மாவட்டங்கள்
கடந்த மாதம் ஐசிஎம்ஆர் மறுபடியும் அந்த சர்வேயை மேற்கொண்டது.. அதில், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த 10 மாவட்டங்களில் மறுபடியும் அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.. அந்த மாவட்டங்களில் 70 தமிழகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்த ஒருசில மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது..

70 சதவீதம் அதிகரிப்பு
இப்போது அந்த 10 மாவட்டங்களிலும் நோய் எதிர்ப்பு சக்தி 70 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக நம் மாநிலத்தில் முதல் தடுப்பூசி 64 சதவீதம் பேருக்கு போடப்பட்டுள்ளது... இதை சற்று அதிகரிக்க வேண்டும்.. 75 சதவீத பேருக்கு செலுத்திவிட்டால், பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்... அதனால் யாரும் பயப்பட தேவையில்லை... இனி கொரோனா உயிரிழப்பு ஏற்பட நமக்கு அதிக வாய்ப்பில்லை.. தொடர்ந்து முயற்சிகளை எடுத்து வருகிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications