சுட்டெரிக்கும் வெப்பம்..இதையெல்லாம் செய்ய வேண்டாம்..டீ,காபியை தவிர்த்திடுங்க..மருத்துவத்துறை அட்வைஸ்
சென்னை: நாடு முழுவதும் வெப்ப நிலை அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் கோடை வெப்பம் வாட்டி வதைக்க தொடங்கியுள்ளது. கோடை காலத்தில் வெப்ப நிலையால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க பின்பற்ற வேண்டியதை மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது.

மதுபானம், டீ, காஃபி, கார்பன் ஏற்றம் சர்க்கரை அதிகம் உள்ள குளிர்பானங்கள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என்பன உள்பட சில அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் வெயில் வாட்டி வதைத்து கொண்டு இருக்கிறது. கடந்த சில நாட்களாக வெப்ப காற்றும் வடமாநிலங்களில் வீசி வருகிறது வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் 35.9 டிகிரி செல்ஸியஸ் முதல் 37.78 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை பதிவாகி இருக்கிறது . பல மாநிலங்களில் வெப்ப அனல் காற்று வீச தொடங்கி உள்ளது.
நாட்டில் பெரும்பாலான இடங்களில் அடுத்த சில நாட்களுக்கு வெப்ப நிலை படிப்படியாக அதிகரிக்கும். அதிகபட்சமாக 2-4 டிகிரி செல்சியஸ் வெப்பம் உயரக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கடந்த 8 ஆம் தேதி விடுத்த எச்சரிக்கையில் தெரிவித்து இருந்தது. அக்னி நட்சத்திரம் இன்னும் தொடங்கவில்லை. ஆனால் இப்போதே வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக உள்ளது.
இதனால், அக்னி நட்சத்திரம் தொடங்கினால் நிலைமை எப்படி இருக்குமோ என மக்கள் யோசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கோடை காலத்தில் வெப்ப நிலையால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க பின்பற்ற வேண்டியதை மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது.

* மதுபானம், டீ, காஃபி, கார்பன் ஏற்றம் சர்க்கரை அதிகம் உள்ள குளிர்பானங்கள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
* காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
அதிக புரதசத்துள்ள உணவுகள், பழைய உணவுகளை தவிர்க்க வேண்டும்.
* அதிக உடல் வெப்பத்தால் மயக்கம் ஏற்பட்டால் உடனடியாக 108 அல்லது 104 என்ற எண்ணை அழைத்து மருத்துவ உதவி பெற வேண்டும். உள்ளிட்ட அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications