பிளஸ் 2, 10ம் வகுப்பு.. பொதுத் தேர்வு எழுதுவோருக்கு.. அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு
சென்னை: மாநில தேர்தல் ஆணையத்தில் ஆலோசனை மேற்கொண்டு தான் பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது, ஏப்ரல் 6 ஆம் தேதி வரை பள்ளிகள் எங்கள் இடம் தான் இருக்கும்.. ஒரு வேளை ஏப்ரல் இரண்டாம் வாரத்திற்கு பிறகு தேர்தல் நடைபெறும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டியின் போது கூறினார். இந்த ஆண்டு முதல் கணக்குப்பதிவியல் தேர்வு எழுதும் மாணவர்களும் சாதாரண கால்குலேட்டர்களை பயன்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது என்றும் மேல்நிலை தேர்வுகளுக்கு 3,412 தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் மாவட்ட மைய நூலகத்தில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ள மேல்நிலை மற்றும் இடைநிலை பொதுத் தேர்வு தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மார்ச் - ஏப்ரல் 2026 ல் நடைபெறவுள்ள மேல்நிலை மற்றும் இடைநிலை பொதுத் தேர்வு தொடர்பாக கண்காணிப்பு அலுவலகர்கள் மற்றும் ஆய்வு அலுவலகருக்கான கூட்டம் அனைத்து இணை இயக்குநர்கள் / துணை இயக்குநர்கள் / அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக்கல்வி/இடைநிலை /தனியார் பள்ளிகள்) மற்றும் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்களுக்கான ஆய்வுக் கூட்டமும், முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான கல்விசார் ஆய்வுக் கூட்டமும் நடைபெற்றது.
அன்பில் மகேஷ் பேட்டி
பின்னர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், "பொது தேர்வுகள் என வரும்போது தேர்வுகளை மிகவும் அழகாகவும் சரியாகவும் நடத்தக்கூடிய மாநிலங்களில் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக உள்ளது. இந்த ஆண்டு முதல் கணக்குப்பதிவியல் தேர்வு எழுதும் மாணவர்களும் சாதாரண கால்குலேட்டர்கரை பயன்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளி தேர்வுகள் சொல்வதை எழுதுபவர்களாக இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், ஆசிரியர் பட்டய படிப்பு மாணவர்கள், பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.
பெரிய எழுத்துக்கள்
மாற்றுத்திறனாளி தேர்வுகளுக்கு ஐந்து விதமான வினாத்தாள்கள் வழங்கப்படும். (வினாக்களின் வரிசை மாற்றப்பட்டிருக்கும்) எனவும் இயற்பியல் வேதியல் கணிதம் வணிக கணிதம் புள்ளியியல் பாடங்களுக்கான தேர்வு எழுதுபவர்களுக்கு இந்த இந்த ஆண்டு லாகரதம் புத்தகம் A4 அளவில் பெரிய எழுத்துக்களில் வழங்கப்பட உள்ளது.
சாதாரண கால்குலேட்டர்
கணக்குப்பதிவியல் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சாதாரண கால்குலேட்டர்களை பயன்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது. மீதம் இருக்கும் வினாத்தாள்களை தேர்வு அறையிலேயே உரையில் இட்டு சீல் செய்ய வேண்டும். இதன் மூலம் வினாத்தாள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் உள்ளிட்ட நடைமுறைகளை இந்த தேர்வு முதல் மேற்கொள்ள உள்ளோம்" என தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில், "பொது தேர்வு என வரும்போது ஆலோசனை மேற்கொள்வது வழக்கம் தான், அந்த வகையில் இன்றயை தினம் முதன்மை செயலாளர் தலைமையில் தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய கண்காணிப்பு அலுவலகர்கள் உடன் ஆலோசனை மேற்கொண்டோம்.
ஆலோசனை கூட்டம்
இந்த ஆண்டு மார்ச் 2ம் தேதி +2 பொதுத்தேர்வு ஆரம்பிக்க உள்ளது. இது சார்ந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தேர்வு நேரங்களில் எவ்வாறு தயாராக இருக்க வேண்டும், வகுப்பறையில் எத்தனை மாணவர்கள் அமர வைக்க வேண்டும், வகுப்பறையில் குடிநீர், பள்ளிகளில் கழிப்பறை வசதி சரியாக உள்ளதா என மாணவர்கள் சார்ந்து ஆலோசிக்கப்பட்டது.
தவறுகள் இல்லாமல் தேர்வு
அதேபோல கண்காணிப்பு அலுவலர்கள் அது குறித்தும் தேர்வு தாள்கள் பள்ளியில் இருக்கும் போது அதற்கு பாதுகாப்புகள் எப்படி இருக்கிறது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கடந்த ஆண்டு ஏதாவது தவறு இருந்தால் அதனை சரி செய்து இந்த முறை எப்படி தவறு இல்லாமல் தேர்வுகளை மேற்கொள்வது உள்ளிட்ட பல விஷயங்களை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பிளஸ் 2 தேர்வு
மேல்நிலை இரண்டாம் ஆண்டிற்கு அதாவது +2 பொதுத்தேர்வுகள் வருகின்ற 02.03.2026 முதல் 26.03.2026 வரையும் நடைபெற இருக்கிறது. மேல்நிலை முதலாம் ஆண்டிற்கு (Arrear) 03.03.2026 முதல் 27.03.2026 வரையும், பத்தாம் வகுப்பிற்கு 11.03.2026 முதல் 06.04.2026 வரையும் பொதுத்தேர்வுகள் நடைபெறவுள்ளது. இப்பொதுத்தேர்விற்கான செய்முறைத்தேர்வுகள் மேல்நிலை இரண்டாம் ஆண்டிற்கு 09.02.2026 முதல் 14.02.2026 வரை நடைபெற்றது.
மேல்நிலை முதலாம் ஆண்டிற்கு (Arrear) 16.02.2026 முதல் 21.02.2026 வரையும், பத்தாம் வகுப்பிற்கு 23.02.2026 முதல் 28.02.2026 வரையும் நடைபெறவுள்ளது. மேல்நிலை இரண்டாம் ஆண்டுப் பொதுத்தேர்வினை பள்ளி மாணாக்கர்கள் 7,99,692 மற்றும் தனித்தேர்வர்கள் 27,783 என மொத்தம் 8,27,475 தேர்வர்கள் தேர்வெழுதவுள்ளனர்.
பிளஸ் 1 தேர்வு
மேல்நிலை முதலாம் ஆண்டுப் (Arrear) பொதுத்தேர்வினை பள்ளி மாணாக்கர்கள் 19,107 மற்றும் தனித்தேர்வர்கள் 5,944 என மொத்தம் 25,051 தேர்வர்கள் தேர்வெழுதவுள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை பள்ளி மாணாக்கர்கள் 8,82,806 மற்றும் தனித்தேர்வர்கள் 26,196 என மொத்தம் 9,09,002 தேர்வர்கள் தேர்வெழுதவுள்ளனர். மேல்நிலைப் பொதுத்தேர்வினை 281 சிறைவாசிகளும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை 395 சிறைவாசிகளும் தேர்வெழுதவுள்ளனர்.
தேர்வு மையங்கள்
மேல்நிலை தேர்வுகளுக்கு 3,412 தேர்வு மையங்களிலும், மேல்நிலை முதலாம் ஆண்டுப் (Arrear) தேர்வுகளுக்கு 2,615 தேர்வு மையங்களிலும் மற்றும் பத்தாம் வகுப்பிற்கு 4,219 தேர்வு மையங்களிலுமாக மொத்தம் 17,61,528 தேர்வர்கள் 2025 - 2026ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்வினை எழுதவுள்ளனர். இத்தேர்வுப் பணியில் ஒவ்வொரு தேர்வு நாளன்றும் சுமார் 49,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.
தேர்வு முறைகேடு
மேலும் தேர்வு முறைகேடுகளை தடுக்க சுமார் 4900 க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் தேர்வுப்பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். பொது தேர்வுகளில் மாணவர்களின் விவரங்களை பதிவு செய்யும் OMR தாளை, பள்ளிகளில் ரிவிசன் தேர்வில் பயன்படுத்துவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்றும் அன்பில் மகேஷ் கூறினார்.
தேர்தல் எப்போது
தமிழ்நாட்டிற்கு தேர்தல் தேதி அறிவிக்காத நிலையில் பொதுத்தேர்வுக்கு ஏதாவது சிக்கல் ஏற்படுமா என்ற கேள்விக்கு, "ஏற்கனவே தமிழ்நாடு தேர்தல் ஆணையத்துடன் ஆலோசனை செய்த பிறகு தான் மாநிலத்தில் பொது தேர்வுகள் தேதி அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 6 ஆம் தேதி வரை பள்ளிகள் எங்கள் இடம் தான் இருக்கும் ஒரு வேளை ஏப்ரல் இரண்டாம் வாரத்திற்கு பிறகு தேர்தல் நடைபெறும்" என தெரிவித்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சந்திர மோகன் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications