சென்னை கடற்கரை டூ தாம்பரம்.. மின்சார ரயிலில் இரவு நேரத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு முக்கிய ‘அலர்ட்’!
சென்னை: சென்னையில் மின்சார ரயில்களை பயன்படுத்தும் பயணிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாளை முதல் வரும் டிசம்பர் 14ஆம் தேதி வரை சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் இரவு நேர கடைசி மின்சார ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் பொதுமக்களின் வசதிக்காக புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் செல்பவர்கள் அதிக அளவில் பயணித்து வருகின்றனர். தினசரி லட்சக்கணக்கான மக்கள் சென்னையில் மின்சார ரயில்களை தங்கள் போக்குவரத்துக்காக பயன்படுத்தி வருகின்றனர். சென்னையைப் பொறுத்தவரை மலிவான போக்குவரத்து, இந்த மின்சார ரயில்களே.

இந்நிலையில், பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் நாளை முதல் கடற்கரை- தாம்பரம் இடையே மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் கடைசி ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் கடைசி ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை (நவம்பர் 29) முதல் வரும் டிசம்பர் 14ஆம் தேதி வரை 16 நாட்களுக்கு சென்னை கடற்கரை - தாம்பரம் செல்லும் இரவு நேர கடைசி ரயில் இயங்காது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பயணிகளின் பாதுகாப்பு கருதி தாம்பரம் ரயில் நிலையத்தில் நவ.29 முதல் டிச.14-ம் தேதி வரை நள்ளிரவு 12.25 முதல் அதிகாலை 2.25 வரை பொறியியல் வேலைகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.
இதனால், அந்த நாட்களில் சென்னை கடற்கரையிலிருந்து இரவு 11.59 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரயிலும், மறுமார்க்கமாக தாம்பரத்திலிருந்து இரவு 11.40 மணிக்கு கடற்கரைக்கு செல்லும் ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications