நாம் தமிழர் நிர்வாகிகள் வீடுகளில் ரெய்டு.. சோதனையில் சிக்கியது என்ன? என்ஐஏ பரபர அறிக்கை
சென்னை: நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் இன்று என்.ஐ.ஏ சோதனை நடைபெற்ற நிலையில், முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக என்ஐஏ அறிக்கை வெளியிட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் சிலரது வீடு, தொடர்புடைய இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று அதிகாலை 4 மணி திடீர் சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக நாம் தமிழர் கட்சி நிர்வாரிகள் 6 பேருக்கு சொந்தமான வீடுகள், தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

தடை செய்யப்பட்ட இயக்கத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும், வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக நிதி பெற்றதாகவும் வந்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றதாக தகவல் வெளியானது. சென்னை கொளத்தூர் நேர்மை நகரில் உள்ள பாலாஜி என்பவர் வீட்டிலும், கோவையில் ஆலந்துறை ஆர்.ஜி.நகர் பகுதியில் உள்ள ரஞ்சித் குமார் என்பவரின் வீட்டில் என்.ஐ.ஏ சோதனை நடைபெற்றதாக தகவல் வெளியாகியது.
கோவை காளப்பட்டி பகுதியைச் சேர்ந்த முருகன் என்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகி வீட்டிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். திருச்சி சண்முகா நகரில் உள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகியும், யூடியூபருமான சாட்டை துரைமுருகன் வீட்டிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே, நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் இசை மதிவாணன் வீட்டிலும் என்.ஐ.ஏ சோதனை நடைபெற்றது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று 6 இடங்களில் நடந்த சோதனையில், ஒரு லேப்டாப், 7 செல்போன்கள், 8 சிம் கார்டுகள், 4 பென் டிரைவ்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெசிய புலனாய்வு முகமை அறிக்கை வெளியிட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications