உயிலை எழுத சரியான வயது என்ன? உயிலில் திருத்தம் செய்யலாமா? உயிலை எழுதும்போது இது ரொம்ப ரொம்ப அவசியம்
சென்னை: உயில் எழுதுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன? உயிலை ரத்து செய்ய முடியுமா? எத்தனை முறை ரத்து செய்யலாம்? உயில்களில் திருத்தம் செய்யலாமா? இதை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
உயில் எழுதுவதென்பது, ஒருவரின் அடிப்படை உரிமையாகவும், அவரது கடைசி ஆசையாகவும் கருதப்படுகிறது. உயில் எழுதியதுமே, நம்பிக்கைக்குரிய 2 பேரிடம், இதுகுறித்து தெரிவிப்பது நல்லது.. இதனால், உரியவர்களிடம் உரிய நேரத்தில் உயில் வந்து சேரும்.

சொத்துக்கள்: 18 வயது நிரம்பியவர்கள் யாராக இருந்தாலும், தங்களுடைய சொத்துகளை உயிலாக எழுத முடியும். ஆனால், ஒருசில காரணங்களின்போது மட்டும் 21 வயது நிரம்பியவர்தான் உயில் எழுத முடியும்..
உயிலை எழுதியதுமே, அதை பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை.. எனினும் நாளடைவில் உறவுகளுக்குள் தேவையில்லாமல் சிக்கல்களை, குழப்பங்களை எழுவதை இது தடுக்க உதவும்.. எனவே, சட்டப்பூர்வமானது மற்றும் அதிகாரப்பூர்வமானது என்பதால் உயில்களை எழுதியதுமே அதை பதிவு செய்வது நல்லது.
உயில் நகல்: அத்துடன், உயிலின் நகலை பதிவு அலுவலகத்தில் கொடுத்துவிடுவது இன்னும் சிறந்தது. உயிலுக்குரிய சொத்து எந்த சார்பதிவாளர் அலுவலகத்தின் கீழ் வருகிறதோ, அங்கு மட்டுமே பதிவு செய்ய வேண்டும்..
உயில் எழுதுவதற்கு ஆவணங்கள் எதுவும் தேவை இல்லை. ஒருவர் சாதாரண பேப்பர் முதல் பத்திர தாள்கள்வரை எதில் எழுதியிருந்தாலும் அந்த உயில் சட்டப்படி செல்லும்.. ஆனால், உயிலில் சொத்தின் விவரங்கள் தெளிவாக எழுதியிருக்க வேண்டும். முக்கியமாக, வேறு யாருக்காவது சொத்து கொடுத்திருந்தால், அதையும் உயிலில் தெளிவாக குறிப்பிட வேண்டும். உயில் சாசனத்தை எந்த மொழியில் வேண்டுமானாலும் எழுதலாம்..
உயில் வாரிசுகள்: உயிலை கையில் எழுதுவது நல்லது.. வழக்கறிஞர் முன்னிலையில்தான் எழுத வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றாலும், சிவில் வழக்கறிஞரை உடன் வைத்துக்கொண்டு உயில் எழுதினால் நல்லது. உயிலின் நம்பகத்தன்மைக்காக குறைந்தபட்சம் 2 சாட்சிகள் தேவை. வாரிசுகள் சாட்சிகளாக இருக்கக் கூடாது. உயிலின் ஒவ்வொரு பக்கத்திலும் சாட்சிகளின் கையெழுத்து, அவர்களின் நிரந்தர அட்ரஸ் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.
ஒருமுறை உயிலை எழுதிவிட்டால், அதை திருத்த முடியாது என்று பலர் நினைக்கிறார்கள். ஒருவர் எழுதிய உயிலை தாராளமாக திருத்தம் செய்யலாம்.. ரத்தும் செய்துவிடலாம்.. ஆனால், எத்தனை முறை திருத்தம் செய்தாலும், கடைசியாக எழுதப்பட்ட உயிலே செல்லுபடியாகும்.. ஒருவேளை, 18 வயது நிரம்பாத மைனர் மீது உயில் எழுதப்பட்டால், அதற்கு காப்பாளர் ஒருவரையும் நியமிக்க வேண்டும்.
கையெழுத்து: அதேபோல, உயில் எழுதியவர் அதில் திருத்தங்களை செய்தால், திருத்திய இடத்தில் தன்னுடைய கையெழுத்தை முழுதாகவோ, குறியீடாகவோ தெளிவாக குறிப்பிடப்படவில்லையானால், அந்த திருத்தத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடையாது என்று சுப்ரீம்கோர்ட் கடந்த 2011ம் ஆண்டில் வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்திருந்தது.
அதாவது, உயிலை எழுதியவர் அதில் திருத்தம் செய்வதாக இருந்தால், திருத்தி எழுதப்பட்ட வாசகங்களுக்கு அருகிலோ, அந்த பத்திரத்தின் பக்கவாட்டிலோ, கீழோ இடைவெளியில் தன்னுடைய கையெழுத்தை பதிவு செய்தால்தான், அது அவருடைய திருத்தம் என்று ஏற்றுக்கொள்ள முடியும் என்று கோர்ட் விளக்கியிருந்தது.
சுப்ரீம் கோர்ட்: அதுமட்டுமல்ல, உயிலை எழுதியவரால் திருத்தங்களை செய்ய முடியாமல், வேறொருவரை கொண்டு திருத்தம் செய்தால், அப்படி திருத்தியதற்கு நல்ல சாட்சிகளை வைத்து கொண்டு செய்ய வேண்டும். அதுவும் குறிக்கப்பட வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட் அப்போது வலியுறுத்தியிருந்தது நினைவுகூரத்தக்கது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications