தமிழ்நாட்டில் கடன், சேமிப்பு தொடர்பாக போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு
சென்னை: போக்குவரத்து கழக ஊழியர்களின் சேமிப்பு தொகைக்கு 8 சதவீத வட்டி வழங்கப்படும் என்றும் சங்கத்தில் கடன்பெற்று தவணை செலுத்தும் அனைத்து உறுப்பினர்களுக்கும் இந்த மாதம் கடனுக்கான தொகையில் வட்டியை கழித்து எஞ்சிய தொகை பிடிக்கப்படும் என்றும் போக்குவரத்து பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன சேமிப்பு கடன் சங்கம் கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கும்பகோணம், விழுப்புரம், நெல்லை , கோவை போன்ற போக்குவரத்துக்கழகங்கள் உள்ளன.சென்னையில் உள்ள போக்குவரத்து பணியாளர்கள் சங்கத்தில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம், விழுப்புரம் போக்குவரத்து கழகம், விரைவு போக்குவரத்து கழக ஊழியர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

போக்குவரத்து பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன சேமிப்பு கடன் சங்கத்தில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளதோடு, தங்கள் சொந்த செலவுக்கு கடனும் பெற்று வருகிறார்கள் அவர்களது கடனுக்கான தவணை தொகையை சம்பளபணத்தில் இருந்து வசூலிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில், கடன் சங்கஉறுப்பினர்களின் சேமிப்பு தொகையான சிக்கன நிதியின் 2022-23-ம் ஆண்டுக்கான வட்டியை 8 சதவீதமாக கணக்கிட்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரம், சங்கத்தில் கடன்பெற்று தவணை செலுத்தும் அனைத்து உறுப்பினர்களுக்கும் இந்த மாதம் கடனுக்கான தொகையில் வட்டியை கழித்து எஞ்சிய தொகை பிடிக்கப்படும்.

கடனுக்கான பிடித்தத்தைவிட வட்டி கூடுதலாக இருந்தால் ரூ.750 பிடிக்கப்படும். எஞ்சியுள்ள வட்டித் தொகை ஜூன் 1-ம் தேதி வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இதுகுறித்த விவரங்களை ஜூன் 1-ம் தேதி முதல் சங்கத்தில் நேரில் வந்து அறியலாம்.
ஆதார் எண், குடும்ப அட்டை:
நடைபெற உள்ள கூட்டுறவு சங்க தேர்தலுக்கு உறுப்பினர்களின் ஆதார் எண், குடும்ப அட்டை எண் கட்டாயம் என்பதால், அதன் விவரங்களை சமர்ப்பிக்கவும் உறுப்பினர்கள் அறிவுறுத்தப்பட்டிருப்பதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications