ரயில் பயணிகளுக்கு திடீர் அறிவிப்பு.. ரயில் சேவையில் மாற்றம்.. மிஸ் பண்ணாம நோட் பண்ணுங்க.. என்னாச்சு
சென்னை: தெற்கு ரயில்வே முக்கிய செய்தியை வெளியிட்டுள்ளது.. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றினையும் பயணிகளின் நலனுக்காக அறிவித்திருக்கிறது.
தெற்கு ரயில்வே பயணிகளின் வசதிக்காக எத்தனையோ அதிரடிகளை கையில் எடுத்து வருகிறது.. இதற்கான சிறப்பு சேவைகளையும் அதுபற்றின அறிவிப்புகளையும் உடனுக்குடன் வெளியிட்டு, பயணிகள் அறியும்படி செய்து வருகிறது.
அதேபோல, பராமரிப்பு பணிகள் உள்ளிட்டவை காரணமாக ரயில் நேரத்தில் மாற்றம், பாதியளவு ரத்து, முழுவதும் ரத்து ஆகிய நடவடிக்கைகளும் அவ்வப்போது மேற்கொள்ளப்படுகின்றன. இதுபோன்ற நேரங்களில் ரயில்களின் நேரத்தினை மாற்றியமைத்து, அந்த தகவலையும், பயணிகளுக்கு அறிவித்து வருகிறது.

பராமரிப்பு பணிகள்: இப்போதும் அப்படி ஒரு பராமரிப்பு பணிகளை தென்னக ரயில்வே மேற்கொண்டுள்ளது.. நேர மாற்றம் செய்யப்பட்ட அறிவிப்பில் சென்னை சென்ட்ரல் - ஹவுரா சூப்பர் பாஸ்ட் ரயில் இடம்பெற்றுள்ளது. அந்த விவரம் இதுதான்:
"ஒடிசாவிற்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் ஒன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. முதல் சேவை தாம்பரத்தில் இருந்து சாம்பல்பூருக்கு நேற்றைய தினம் முடிவடைந்து விட்டது. இதையடுத்து ரயில் எண் 06076 கொண்ட சாம்பல்பூர் முதல் சென்னை கடற்கரை வரை செல்லும் சிறப்பு ரயில் வரும் ஜூன் 24ஆம் தேதி சனிக்கிழமை காலை 5 மணிக்கு புறப்படுகிறது. இது அடுத்த நாள் காலை 7 மணிக்கு சென்னை கடற்கரையை வந்தடையும். ஒரே ஒரு சேவை மட்டும் வழங்கப்படும்.
மைசூரு: பகனகா பஸார் ரயில் நிலையம் அருகே நடந்து வரும் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவை, ஜூன் 23ம் தேதி பிற்பகல் 4.15 மணிக்கு ஹவுராவில் இருந்து புறப்படும் ரயில் எண் 22817 கொண்ட ஹவுரா - மைசூரு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. ஜூன் 25ம் தேதி மைசூருவில் இரவு 11.45 மணிக்கு புறப்படும் ரயில் எண் 22818 கொண்ட மைசூரு - ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜூன் 23ம் தேதி மாலை 6 மணிக்கு சந்திராகச்சியில் இருந்து புறப்படும் ரயில் எண் 22807 கொண்ட சந்திராகச்சி - சென்னை சென்ட்ரல் ஏசி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
ரயில்கள் ரத்து: ஜூன் 25ம் தேதி மைசூருவில் இரவு 11.45 மணிக்கு புறப்படும் ரயில் எண் 22818 கொண்ட மைசூரு - ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜூன் 23ம் தேதி மாலை 6 மணிக்கு சந்திராகச்சியில் இருந்து புறப்படும் ரயில் எண் 22807 கொண்ட சந்திராகச்சி - சென்னை சென்ட்ரல் ஏசி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
ஜூன் 25ம் தேதி சென்னை சென்ட்ரலில் காலை 8.10 மணிக்கு புறப்படும் சென்னை சென்ட்ரல் - சந்திராகச்சி ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதையடுத்து ரயில் எண் 16128 கொண்ட குருவாயூர் - சென்னை எழும்பூர் விரைவு ரயில் இடையில் வர்கலா சிவகிரியில் ஒரு நிமிடம் நிற்க தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ரயில் பயணிகள்: இது வரும் ஜூன் 28ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, கொல்லத்தில் 3.42 மணிக்கு வருகை புரிந்து 3.45 மணிக்கு புறப்படுகிறது. வர்கலா சிவகிரியில் 4.05 மணிக்கு வருகை புரிந்து 4.06 மணிக்கு புறப்படுகிறது. திருவனந்தபுரத்தில் 5.10 மணிக்கு வருகை புரிந்து 5.15 மணிக்கு புறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை ரயில் பயணிகள் தவறவிட வேண்டாம்" என்று தென்னக ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications