வெளியே போயிடாதீங்க.. ஆபிஸ் போறவங்களுக்கு முக்கிய வார்னிங்.. சென்னை மழை கூட ஓகே.. ஆனா இதுதான் சிக்கல்
சென்னை: சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் அலுவலகம் செல்லும் மக்களுக்கு முக்கியமான வார்னிங் ஒன்று வானிலை மையம் சார்பாக கொடுக்கப்பட்டு உள்ளது.
பொதுவாக மழை பெய்தாலே மாணவ, மாணவியருக்கு சந்தோசம்தான். காரணம் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும். அதன்படியே இன்றும் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.

ஜூன் மாதத்தில் இப்படி சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவது எல்லாம் ஆச்சர்யமான விஷயம். கடும் வெயில் காரணமாக இந்த மாதம் 12 நாட்கள் தாமதமாகவே பள்ளிகள் திறக்கப்பட்டன. தமிழ்நாட்டில் கடந்த 12ம் தேதி 6-12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டது. 1-5ம் வகுப்புகளுக்கு 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. 1ம் தேதியில் இருந்து 7ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்ட பள்ளிகள் திறப்பு அதன்பின் மீண்டும் 12, 14 தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
கடும் வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளி போன நிலையில் மீண்டும் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. விடா மழை காரணமாக இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அலுவலக பணிகள்: ஆனால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டாலும் அலுவலகங்களுக்கு விடுமுறை என்பது மிக மிக அரிதான விஷயம். என்ன மழை பெய்தாலும் ரெயின் கோட் மாட்டிக்கொண்டு அலுவலகம் செல்ல வேண்டியது கட்டாயம்.
வீட்டில் இருந்தபடியே வொர்க் பர்ம் ஹோம் பார்க்க வசதி உள்ளவர்கள் மட்டுமே கொஞ்சம் இந்த மழையால் ஆறுதல் அடைவார்கள். இந்த நிலையில்தான் சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் அலுவலகம் செல்லும் மக்களுக்கு முக்கியமான வார்னிங் ஒன்று வானிலை மையம் சார்பாக கொடுக்கப்பட்டு உள்ளது.

அதன்படி சென்னையில் கனமழை காரணமாக அலுவலகம் செல்ல விரும்பினாலும் மின்னல் தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அடுத்த 2 மணி நேரத்திற்கு தீவிர மின்னல்கள் இருக்கும் என்று வானிலை மையம் எச்சரித்து உள்ளது. சென்னையில் இன்று பல இடங்களில் அடுத்தடுத்து மின்னல் தாக்கிய நிலையில் இதற்கான காரணம் வெளியாகி உள்ளது.
இந்த மின்னல்கள் முகில் - புவி வகை மின்னல்கள் ஆகும். அதாவது மேகத்தில் இருந்து பூமியை நோக்கி மின்னல்கள் அடிக்கும் வகை ஆகும். சென்னைக்கு அருகே உள்ள வங்கக்கடல் பகுதியில் இருந்து சென்னையை நோக்கி மேகங்கள் வந்துள்ளன.

கரு மேகங்கள் நிலப்பரப்பிற்கு மேலே வரும் முன் வலிமை இழக்க வேண்டும். ஆனால் இவை வலிமை இழக்காமல் தொடர்ந்து மின்னூட்டம் பெற்ற முழு வலிமையோடு சென்னைக்கு வருகின்றன. இதனால் சென்னையில் மின்னல்கள் ஏற்படுகின்றன.
இந்த மின்னல்களுக்கு இடையே அலுவலகம் செல்வது பாதுகாப்பு இல்லை என்பதால் அலுவலக ஊழியர்கள் கவனமாக இருக்கும்படி எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. அதோடு மழையால் தண்ணீர் தேங்கிய காரணத்தால் சென்னையில் பல பகுதிகளில் சாலைகள் மூடப்பட்டு உள்ளன.
கத்திப்பாரா உள்ளிட்ட முக்கிய சாலைகள் கூட மூடப்பட்டு உள்ளன. இதன் காரணமாகவும் அலுவலக ஊழியர்கள் அலுவலகம் செல்வது சிரமமான காரியம் ஆகி உள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications