இன்னும் டைம் இருக்கு.. சென்னை வானிலையில் நடக்கும் மாற்றம்.. தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை வானிலையில் நடக்கும் முக்கிய மாற்றம் ஒன்றை பற்றி தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட் வெளியிட்டு உள்ளார்.

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளது. வரும் நாட்களில் தமிழ்நாட்டில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 95 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றது. சென்னையிலும் 95 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது.

Important warning from Tamil Nadu weatherman on Chennai Weather

இந்தியாவின் பல பகுதிகளை இந்த வெப்ப அலை தாக்க உள்ளது. இதன் மூலம் வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ் முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரை உயர வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. சில இடங்களில் 5 டிகிரி செல்ஸியஸ் வரை கூட வெப்பநிலை உயரும் வாய்ப்புகள் உள்ளன.

வரும் நாட்களில் வெப்பநிலை பல மாநிலங்களில் 100 டிகிரி பேரன்ஹீட்டை தொட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த 3-5 நாட்களில் வடகிழக்கு இந்தியா மற்றும் மேற்கு இமயமலைப் பகுதியைத் தவிர நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இந்த கடுமையான வெப்பநிலை நிலவும். தென் இந்தியாவில் கேரளா, கர்நாடகா, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தமிழ்நாட்டு பகுதிகளில் ஆங்காங்கே லேசான மழை பெய்யும்.

ஆனால் மற்ற இடங்களில் வெயில் வாட்டி வதைக்கு என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Important warning from Tamil Nadu weatherman on Chennai Weather

சென்னை வானிலை: இந்த நிலையில்தான் சென்னை வானிலையில் நடக்கும் முக்கிய மாற்றம் ஒன்றை பற்றி தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட் வெளியிட்டு உள்ளார்.

கடல் காற்று காரணமாக நுங்கம்பாக்கம் 41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை நோக்கி உயர்வதிலிருந்து தப்பித்து இருக்கிறது. கடல் காற்று நுங்கம்பாக்கத்தை காப்பாற்றி உள்ளது. அங்கே வெப்பநிலை இப்போது 37 டிகிரி செல்சியஸாகக் குறைந்துள்ளது.

ஆனால் மேற்குப் பகுதிகளில் சில்லென்று காற்று வீச இன்னும் நேரம் எடுக்கும்.

அண்ணா நகர் 41 டிகிரி செல்சியசுக்கு அருகில் வெப்பநிலை நிலவுகிறது.

பொத்தேரி 41 டிகிரி செல்சியஸ்
வானகரம் 40.7 டிகிரி செல்சியஸ்
வில்லிவாக்கம்/அண்ணா நகர் மேற்கு 40.5 டிகிரி செல்சியஸ்
தாம்பரம் 40.4 டிகிரி செல்சியஸ்
மீனம்பாகத்தில் 40 டிகிரி செல்சியஸ் நிலவுகிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

Important warning from Tamil Nadu weatherman on Chennai Weather

காரணம் என்ன?: தமிழ்நாட்டில் இப்படி வெப்பநிலை உயர காரணம் இருக்கிறது.

வங்கதேசம் மற்றும் மியான்மரை நேற்று மோச்சா புயல் தாக்கியது. 240 கிமீ வேகத்தில் இந்த புயல் காரணமாக கடுமையான காற்று வீசியது.

சூப்பர் சூறாவளியாக இந்த புயல் மியான்மரில் கரையை கடந்துள்ளது.

இந்த புயல் தமிழ்நாட்டை தாக்காத காரணத்தால், தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய மேகங்களை இது இழுத்து சென்றுள்ளது. இதனால் தமிழ்நாட்டிற்கு கோடை மழை முற்றிலுமாக குறைந்து வெயில் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. இயல்பான வெயிலை விட 2-3 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

தற்போது தமிழ்நாட்டில் 39 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை உள்ளது. இது 41ஐ அடையும் வாய்ப்புகள் உள்ளன. இதன் அர்த்தம் வரும் நாட்களில் வெப்பம் கொளுத்த போகிறது.

இன்று தமிழ்நாட்டில் 41 டிகிரி செல்ஸியஸ் வரை உயரும் வாய்ப்புகள் உள்ளன. முக்கியமான சென்னை போன்ற கடலோர மாவட்டங்களிலும் வேலூர் போன்ற உள்ளூர் மாவட்டங்களிலும் வெயில் உச்சத்தில் இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+