ஃபாசிச அணுகுமுறை.. மும்மொழி கொள்கையை வலிய திணிப்பது ஜனநாயகத்து எதிரானது.. தவெக விஜய்
சென்னை: மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதாகும் என்றும், மாநில மொழிக் கொள்கைக்குச் சவால் விடுத்து, நிதி ஒதுக்கமாட்டோம் என்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். ஃபாசிச அணுகுமுறைகளை எந்த வடிவத்தில் யார் கையிலெடுத்தாலும் அது மாநில அரசாக இருந்தாலும் சரி, மத்திய அரசாக இருந்தாலும் சரி மக்கள் பக்கமே தமிழக வெற்றிக் கழகம் நிற்கும் என்று விஜய் தெரிவித்துள்ளார்.
சமக்ர சிக்சா அபியான் திட்டத்தில் மூலம் தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும் கல்வி நிதி ரூ.2152 கோடி மத்திய அரசு வழங்காமல் நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு குற்றம் சுமத்தி வருகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோரும் இது தொடர்பாக மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார்கள்.

ஆனால் இன்னும் நிதி வந்தபாடில்லை. தேசியக் கல்வி கொள்கையினை ஏற்றுக்கொண்டால் தான், நிதி வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்ததாக, தமிழக அரசு சார்பில் கூறப்படுகிறது. இது தொடர்பான மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கருத்துக்கும் தமிழக அரசு கண்டனம் தெரிவித்து இருந்தது. இத்தகைய சூழலில், மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதாகும் என்றும், மாநில மொழிக் கொள்கைக்குச் சவால் விடுத்து, நிதி ஒதுக்கமாட்டோம் என்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இது தொடர்பாக கூறியிருப்பதாவது:- மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன? ஜனநாயகத்தின் நான்காவது தூணான இதழியல் துறைக்கு உரியதான பத்திரிகை சுதந்திர தர்மம் காக்கப்பட வேண்டும். நூற்றாண்டு காணும் விகடனின் இணையத்தளப் பக்கம் முடக்கப்பட்டதற்கு ஒன்றிய அரசுதான் காரணம் என்கிற கருத்து நிலவுகிறது.
பத்திரிகை, ஊடகங்களால் வெளியிடப்படும் கருத்துகள் தவறானவையாகவோ, குற்றம் சுமத்துபவையாகவோ இருந்தால் நீதிமன்றம் மூலம் தீர்வு காண வேண்டுமே தவிர, கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் வகையில் செயல்படுவது, அரசியல் சாசன உரிமையைக் கேள்விக்குறி ஆக்குவதன்றி வேறென்ன?

மாநில மொழிக் கொள்கைக்குச் சவால் விடுத்து, தமிழகத்திற்கு நிதி ஒதுக்கமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிப்பதும், விகடன் இணையத்தளப் பக்கத்தை முடக்கியதும் ஜனநாயகத்திற்கு எதிரான, கண்டனத்திற்கு உரிய ஃபாசிச அணுகுமுறையே. ஃபாசிச அணுகுமுறைகளை எந்த வடிவத்தில் யார் கையிலெடுத்தாலும் அது ஒன்றிய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் மக்கள் பக்கம் நின்று தமிழக வெற்றிக் கழகம் எந்நாளும் தீர்க்கமாக எதிர்க்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
விஜய் கூட டெல்லி போனவங்க யார்? அவங்களுக்கும் தமிழகத்திற்கும் என்ன சம்பந்தம்? தராசு ஷ்யாம் டென்ஷன் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
மாட்டிக்கிட்ட பங்கு..பயிர்க் கடன் தள்ளுபடி! ரூல்ஸ் தெரியாமல் சிக்கிய விஜய்! நேக்காக எஸ்கேப்பான திமுக -
காங்கிரஸை டம்மி ஆக்குதா தவெக? ஒரே நாளில் சொதப்பிய விஜய்யின் டெல்லி பயணம்! அப்ப பாஜக லேசில் விடாதே -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
விஜய்யை திட்டமிட்டு புறக்கணித்த அமித்ஷா? கேரள முதல்வரை மீட் பண்ணிருக்காரே.. டெல்லியில் நடந்தது என்ன? -
மத்திய அரசு வேலை.. 10 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்.. பல ஆயிரங்களில் சம்பளம்! -
தவெகவுக்கு தாவிய இசக்கி சுப்பையா.. அம்பை தொகுதியில் எதிர்க்கட்சியே இல்லை! மக்கள் டென்ஷன்!












Click it and Unblock the Notifications