வெறும் 2 மணி நேரம் அனுமதி.. பட்டாசு வெடிப்போர் இந்த 19 பாயிண்ட் பாருங்க.. ஹெல்ப் லைன் நோட் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று அக்டோபர் 31ம் தேதி நாடு முழுவதும் தீபாவளி கொண்டாடப்பட்டு வருகிறது.. தீபாவளி கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடிப்பதில் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும் என்பதற்காக, நம்முடைய காவல்துறை முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

இன்று தீபாவளி பட்டாசு வெடிக்கும் போது, பாதுகாப்பாக வெடிக்க வேண்டும்.. பட்டாசு வெடிக்கும்போது எப்போதும் ஒரு வாளி தண்ணீர் மற்றும் மணலை தயாராக வைத்திருங்கள்.. பட்டாசுகளை வெடிப்பதற்கு முன்பு அதிலுள்ள குறிப்புகளையும், வழிமுறைகளையும் கவனமாக பின்பற்ற வேண்டும்.

helpline chennai police

பட்டாசுகள் : பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் பட்டாசுகள் வெடிப்பதற்கான விதிமுறைகள், கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அறிவுரைகளை சென்னை காவல் ஆணையர் அருண் வழங்கியுள்ளார். அதன் விவரம்:

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சுற்றுச்சூழலுக்கு உகந்த ரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட பசுமைப் பட்டாசுகள் மட்டும் விற்கப்படவும், வெடிக்கப்படவும் வேண்டும். பட்டாசுகள் வெடிக்க காலை 6 முதல் 7 மணி வரையிலும் இரவு 7 முதல் 8 மணி வரையிலும் என்று 2 மணி நேரங்கள் ஒதுக்கியுள்ளதால், இந்த நேரத்தில் மட்டும் பட்டாசு வெடிக்க வேண்டும்.

டெசிபல் அளவு: பட்டாசு வெடிக்கும் இடத்திலிருந்து 4 மீட்டருக்கு அப்பால் 125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பக் கூடிய பட்டாசுகளை தயாரிக்கவோ, பயன்படுத்தவோ, விற்கவோ கூடாது. மேலும் தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு வெடிகளை விற்பதோ, பயன்படுத்துவதோ கூடாது.

பட்டாசுகளை எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் உள்ள இடத்தில் வெடிக்காதீர்கள். இருசக்கர, 3 சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள் நிறுத்தி வைத்திருக்கும் இடங்களின் அருகிலும் பெட்ரோல் நிலையங்கள் அருகிலும் பட்டாசுகள் வெடிக்கக் கூடாது.

பட்டாசுகள்: பட்டாசுகளை கொளுத்தி தூக்கி எறிந்து விளையாடக் கூடாது. மக்கள் நடமாடும் இடத்தில் கவனக் குறைவாக பட்டாசுகளை வெடிக்காதீர்கள். பட்டாசுகளை வெடிக்கும் பொழுது தகர டப்பாக்களால் மூடக்கூடாது. குடிசைப் பகுதிகளிலும், மாடிக்கட்டிடங்கள் அருகிலும் ராக்கெட் போன்ற வெடிகளை வெடிக்கக் கூடாது. எரியும் விளக்கு அருகில் பட்டாசுகளை வைக்கக்கூடாது. ஈரமான பட்டாசுகளை சமையலறையில் வைத்து உலர்த்தக் கூடாது.

பெரியவர்கள் பாதுகாப்பின்றி குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிகளை கொளுத்த அனுமதிக்காதீர்கள். பட்டாசு விற்கும் கடைகள் அருகில் சென்று புகைபிடிப்பதோ, புகைத்து முடித்தபின் சிகரெட் துண்டுகளை அஜாக்கிரதையாக வீசி எறிவதோ கூடாது. பட்டாசு விற்கும் கடை அருகே சென்று விளம்பரத்துக்காகவோ, போட்டிக்காகவோ கூட பட்டாசுகளை வெடிக்கக்கூடாது.

மெழுகுவர்த்தி: பட்டாசு விற்பனையாளர்கள் எக்காரணத்தை முன்னிட்டும் மெழுகுவர்த்தியையோ பெட்ரோமாக்ஸ் அல்லது சிம்னி விளக்கையோ கடை அருகிலோ அல்லது கடையிலோ உபயோகிக்கக் கூடாது. பட்டாசு வகைகள் சேமித்து வைத்திருக்கும் வீட்டிலோ அல்லது கடைகளிலோ ஊதுவத்தி கொளுத்தி வைக்கக்கூடாது. பட்டாசுகளை வெடிப்பதற்கு தீக்குச்சிகளையோ நெருப்பையோ உபயோகிப்பதை விட நீளமான ஊதுபத்தி உபயோகித்து ஆபத்துகளைத் தவிர்க்கவும்.

கால்நடைகள் அருகில் பட்டாசு வெடிப்பதால் அவை மிரண்டு ஓடும்போது வாகன ஓட்டிகள் மீதும், பாதசாரிகள் மீதும் முட்டி விபத்துகள் நேரிடலாம், அதைத் தவிர்க்க வேண்டும். தீ விபத்துகள் மற்றும் பாதுகாப்பற்ற முறையில் வெடிகள் வைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு எடுத்துரைத்து, சென்னை பெருநகர காவல் துறை அறிவித்துள்ள 19 பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்த வேண்டும்.

கதவுகள்: பட்டாசு வெடிக்கும்போது பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.. வீட்டின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூட வேண்டும். வீடுகளில் சிறு குழந்தைகள் இருந்தால் அவர்களை வீட்டுக்குள்ளேயே பாதுக்காப்பாக வைத்திருக்க வேண்டும். குழந்தைகள் பட்டாசுகள் வெடித்தால் பெரியவர்களின் மேற்பார்வையுடன் வெடிக்க வேண்டும்.

பூந்தொட்டிகள் மற்றும் பிற பறக்கும் பட்டாசுகளை ஓலை வீடுகள் மற்றும் வைக்கோல் வயல்களை விட்டு திறந்த வெளியில் சுட வேண்டும்.. பட்டாசுகளை வைத்து புதிய பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ள கூடாது..

மின்கம்பங்கள்: முகங்களை பட்டாசு அருகில் கொண்டு செல்வதை தவிர்க்கவும். பட்டாசு வெடிக்கவில்லை என்றால் மீண்டும் பற்ற வைக்க முயற்சிக்க வேண்டாம்.. மின்கம்பங்கள் அருகே பட்டாசுகளை வெடிக்க வேண்டாம். பூந்தொட்டிகள், கைக்குண்டுகள் போன்ற பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. பட்டாசுகளை கொளுத்தி, சாலைகளில் வெளிப்படையாக வீச வேண்டாம். பட்டாசுகளின் புகையிலிருந்து விலகி இருக்க வேண்டும்.

மேலும், தீ விபத்து அல்லது பட்டாசுகளினால் ஏதேனும் விபத்து நேர்ந்தால், காவல் துறை அவசர உதவி-100, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அவசர உதவி எண்-101, அவசர மருத்துவ உதவிக்கு ஆம்புலன்ஸ் எண்-108, தேசிய உதவி எண்-112 ஆகியவற்றை உடனடியாக தொடர்பு கொண்டு மனித உயிர்களை காப்பாற்றி, பெரும் அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும். இவ்வாறு காவல் ஆணையர் அருண் கேட்டுக் கொண்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+