வடகொரியாவை விடுங்க.. உலகின் சீக்ரெட் நாடு.. ஏடிஎம், இண்டர்நெட் எதுவும் கிடையாது! எங்கே இருக்கு தெரியுமா?
சென்னை: சிறிது நேரம் இணைய வசதி கிடைக்காவிட்டாலே தவித்து போகக் கூடிய அளவுக்கு மக்களிடையே இணைய பயன்பாடு அதிகரித்துவிட்ட நிலையில், இன்னும் மொபைல் இண்டர்நெட் (Internet) என்றால் என்ன என்று கூட தெரியாத வினோத நாடு ஒன்று உள்ளது. உலகின் மிக ரகசிய நாடு (வடகொரியா இல்லை) என்று சொல்லப்படும் அந்த நாடு எது? ஏன் இப்படியான ஒரு நிலை அந்த நாட்டில் உள்ளது என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
உள்ளங்கைக்குள் உலகம் என்று சொல்லும் அளவிற்கு தகவல் தொழில் நுட்பம் வளர்ந்துவிட்டது. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தொலைத்தொடர்பு வசதி மூலம் அடுத்த நொடியே தொடர்பு கொண்டு பேச முடிகிறது. வீடியோ கால், லைவ் சாட் வசதி என தொலைத்தொடர்பு வசதி மேம்பட்டுவிட்ட இந்த காலத்தில், ஒரு நாட்டில் மட்டும் இன்னும் மொபைல் இணைய வசதி என்றால் என்ன என்று மக்கள் கேட்கும் நிலையே உள்ளதாம்.

இணைய வசதியே இல்லாத நாடு
அமேசான் வனப்பகுதிகளில் வெளி உலக தொடர்பு இல்லாத பழங்குடியின மக்கள், இயற்கையேடு இயைந்து வாழும் மக்களாக இருப்பார்களோ? என நினைக்க வேண்டாம். ஒரு நாட்டின் அரசாங்கமே இப்படி கட்டுப்பாடுகளை விதித்து வைத்து இருக்கிறது. அதற்காக வடகொரியாவா என நினைத்துவிட வேண்டாம். ஆப்பிரிக்க நாடான எரித்ரியாவில் இப்படியான கெடுபிடிகள் உள்ளது.
ஆப்பிரிக்காவின் வடகொரியா என்று அழைக்கப்படும் இந்த நாடு ஒட்டு மொத்தமாக உலகின் பிற பகுதிகளோடு தொடர்பு இன்றி உள்ளது. சமூக வலைத்தளங்களோ, ஏடிஎம் வசதியோ உள்ளிட்ட வசதிகள் எதுவும் இல்லை. கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள இந்த நாடு, செங்கடல் அருகில் உள்ளது. உலகின் மிகவும் ரகசியமான நாடு என்று எழைக்கப்படும் எரித்ரியாவின் அண்டை நாடுகளாக திஜிபோட்டி, சூடான் மற்றும் எத்தியோப்பியா ஆகியவை உள்ளன.
மொபைல் இண்டர்நெட் வசதியே கிடையாது
எரித்ரியாவில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்குள்ள மக்கள் கட்டாய ராணுவ சேவைக்கும் செல்ல வேண்டுமாம். இணைய வசதியே இல்லாத உலகின் ஒரே நாடாக எரித்ரியா மட்டும்தான் தற்போது உள்ளது. நாட்டின் மக்கள் தொகையில் வெறும் ஒரு சதவீதத்தினர் மட்டுமே ஏதோ ஒரு காலத்தில் இணையதள வசதியை பயன்படுத்தியதாக அறியப்படுகிறது. மொபைல் இண்டர்நெட் வசதி அறவே கிடையாது.
பிரபலமான சில கஃபேக்களில் மட்டும் இணையவசதி உள்ளது. இந்த இணைய வசதியை மக்கள் வைஃபை கனெக்ட் செய்து பயன்படுத்திக்கொள்கிறார்களாம். ஆனாலும் வெறும் 2 ஜி வேகத்திற்கும் குறைவான வேகத்தில்தான் இணையவசதி கிடைக்கிறதாம். அதிலும் இணைய வசதியை பயன்படுத்துவதற்கு பெரிய அளவில் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால் ஒரு சில மக்களே இந்த வசதியையும் பயன்படுத்துகிறார்களாம்.
ஒரு மணி நேரத்துக்கு ரூ.100
இந்தியாவை சேர்ந்த யூடியூபர் ஒருவர் எரித்ரியாவுக்கு சென்று அது தொடர்பான வீடியோவை பகிர்ந்து இருந்தார். அவர் கூறுகையில், "எரித்ரியாவில் உள்ள கஃபேவில் இணைய வசதியை பயன்படுத்த ஒரு மணி நேரத்திற்கு இந்திய மதிப்பில் 100 ரூபாய்க்கும் மேல் கட்டணமாக வசூலிக்கப்படுகிறதாம்.
இவர் வீடியோவில் பகிர்ந்த இந்த தகவல் தற்போது இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. எரித்ரியாவை பற்றிய தகவல்களை அதிர்ச்சி கலந்த வியப்புடன் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகிறார்கள். இதேபோன்று இந்த நாட்டில் ஏடிஎம்களே கிடையாதாம். பணம் எடுக்க வேண்டும் என்றால் வங்கிக்கு தான் செல்ல வேண்டுமாம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications