வெளியில் வந்து பார்த்து கொள்கிறேன்.. அதுவரைக்கும் அமைதியா இருங்கப்பா.. சசிகலா மெசேஜ்!
சிறையில் சந்தித்தபோது தினகரனுக்கு சசிகலா அறிவுரை செய்துள்ளதாக கூறப்படுகிறது
Recommended Video
சென்னை: வழக்கமாக டிடிவி தினகரனை சந்திக்கும்போதெல்லாம் வறுத்தெடுக்கும் சசிகலா, இந்த முறை அந்த அளவுக்கு கோபப்படவில்லை. ஆனால் பதிலுக்கு ஒரே ஒரு வார்த்தையை மட்டும் திரும்ப திரும்ப சொல்லி அனுப்பி வைத்திருக்கிறாராம்!
ஒவ்வொரு முறை தினகரன் சிறைக்கு சென்று சசிகலாவை பார்க்கும்போதெல்லாம் ஏதாவது பிரச்சனையோடுதான் செல்வார். ஒன்று கோர்ட், கேஸ்களில் பாதகமான முடிவாக இருக்கும், அல்லது கட்சிக்குள் பூசல், குழப்பம் என்று இருக்கும்.
இதில் எதுவுமே கிடைக்காவிட்டால், தங்களை நம்பி இருந்த 18 பேரின் வாழ்க்கை, எதிர்காலம் என்னாவது என்ற கேள்வி எழும். ஆக மொத்தம், சந்திப்பின்போது மகிழ்ச்சியான விஷயங்களை பகிர்வது என்பது இந்த 3 வருஷத்தில் அரிதுதான்.

கோபம்
ஒவ்வொரு முறையும் கட்சிக்குள்தான் சிக்கல் இருக்கும். அதிலும் இரண்டு நாளைக்கு முன்னாடி தினகரன், சசிலாவை பார்த்தபோது கட்சியே காணாமல் போகும் நிலை வந்திருந்தது. அதனால் எப்படியும் சரமாரி வார்த்தைகள் வரும், எக்குதப்பாய் எதுவும் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

புன்சிரிப்பு
ஆனால் கூல் அரசியல்வாதி, வழக்கம்போல புன்சிரிப்புடன்தான் சென்னை திரும்பினார். நீண்ட நேர ஆலோசனை, புது நிர்வாகிகள் லிஸ்ட் என்று பளிச்சென வந்து இறங்கினார். தினகரன் வந்து பார்ப்பதற்கு முன்னமேயே சசிகலாவுக்கு நிறைய விஷயங்கள் தெரிந்திருக்கும்போல.

அட்வைஸ்
முக்கிய நிர்வாகிகள் கட்சியை விட்டு செல்வது குறித்தோ, கட்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது குறித்தோ பெரிசாக அலட்டி கொள்ளவில்லை. அதே சமயம், தினகரனுக்கு ஒரே ஒரு அட்வைஸ் மட்டும் தந்திருக்கிறார். "இனி யாரையும் வெளியே போகாமல் பார்த்து கொள். அனுசரித்து நடந்து கொள். மற்றதை நான் வெளியில் வந்து பார்த்து கொள்கிறேன்" என்பதுதானாம் அது.

தன்னிச்சை
தினகரன் எங்களை யாருமே மதிக்கவில்லை, தன்னிச்சையாக செயல்படுகிறார் என்பதுதான் இதுவரை அமமுகவில் இருந்து வெளியேறிய நிர்வாகிகள் சொன்ன குற்றச்சாட்டு. இது உண்மையோ, பொய்யோ நமக்கு தெரியாது. ஆனால் இவர்களின் ஸ்டேட்மெண்ட்டை சசிகலா நன்றாக கவனித்துள்ளார்.

கலக்கம்
ஏனெனில், தன் பேச்சை மீறியே எல்லா விஷயத்திலும் தினகரன் செயல்படுகிறார் என்பதுதான் சசிகலாவின் இத்தனை நாள் வருத்தமும், கோபமும். இதையெல்லாம் கணக்கு போட்டுதான், இந்த வார்த்தையை திரும்ப திரும்ப சொல்லி அனுப்பி உள்ளார். மேலும் "வெளியில் வந்து பார்த்து கொள்கிறேன்" என்றால் அந்த அர்த்தம் என்ன என்று அதிமுக உள்ளிட்டவர்களுக்கு கலக்கத்தை தந்து வருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications