அடிக்கடி வீட்டுக்கு வந்துபோன மைலாப்பூர் நண்பன்.. மனைவியுடன் உருவான கள்ளக்காதல்.. நேர்ந்த பயங்கரம்
சென்னை: சென்னையில் மனைவியுடன் கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த இளைஞரை, நண்பர்களுடன் இணைந்து ஆட்டோ டிரைவர் ஒருவர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார். இந்த சம்பவம் துரைப்பாக்கம் கண்ணகி நகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகரில் வசிப்பவர் ரகு(24). அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார். இவரது மனைவி வினோதினி(21). ரகுவுக்கு மைலாப்பூரை சேர்ந்த கார்த்திக்(21) என்பவர் நண்பராவார். இதனால் அடிக்கடி ரகு வீட்டிற்கு கார்த்தி வந்து போயுள்ளார்.
அப்போது வினோதினிக்கும் கார்த்திக்கும் நெருங்கி பழக ஆரம்பித்தனர். இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கார்த்திக் வினோதினியை அழைத்துக்கொண்டு அவரது வீட்டில் தங்க வைத்திருக்கிறார்.

வீடுதேடி வந்த கார்த்திக்
அப்போது கார்த்திக் வீட்டில் தன் மனைவி வினோதினி இருப்பதை அறிந்து அங்கு சென்று அவரை அழைத்துக்கொண்டு சென்றிருக்கிறார். இதற்கிடையில், ரகு வீட்டில் இல்லாத சமயத்தில் கார்த்திக் அவ்வப்போது வினோதியை தேடி வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இருவருக்கும் நெருக்கம் தொடர்வதை அறிந்த ரகு, கார்த்திக்கை பலமுறை எச்சரித்தாராம்.

கொலை செய்ய திட்டம்
ஆனாலும் கார்த்திக் வினோதினியுடன் உள்ள தொடர்பை கைவிடவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த ரகு, கண்ணகி நகரில் உள்ள தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து கார்த்திக்கை கொலை செய்ய திட்டம் போட்டிருக்கிறார்.

கார்த்திக் வெட்டிக்கொலை
இதன்படி நேற்று முன்தினம் இரவு கண்ணகி நகர் பகுதிக்கு கார்த்திக்கு வந்திருக்கிறார். இதை அறிந்த ரகு தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ஆட்டோவில் வந்து கார்த்திக்கை சரமாரியாக தாக்கியுள்ளார்.. இதில் கார்த்திக் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.

ஆட்டோ டிரைவருக்கு வலை
இது குறித்து தகவல் அறிந்த கண்ணகி நகர் போலீசார் கார்த்திக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீனா(19), ஜெயராஜ்(19) ஆகியோரை கைது செய்தார்கள். தலைமறைவாக உள்ள ரகு உள்ளிட்டோரை தேடி வருகிறார்கள்.
-
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னை மக்கள் பொறுமை இழந்தனர்.. கட்டி முடிச்சு 4 மாசமாச்சு.. எப்ப தான் திறப்பீங்க! -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
நடிகர் ரவி மோகனுக்கு பின்னடைவு! ஆர்த்திக்கு ஜீவனாம்சம் வழங்கும் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி! -
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா?












Click it and Unblock the Notifications