சென்னையில் இன்று ‛பவர்கட்’.. காலை 9 டூ மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.. உங்க ஏரியா இருக்கா?
சென்னை: சென்னையில் பராமரிப்பு பணியின் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சில இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்கும் வகையில் அவ்வப்போது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஒவ்வொரு பகுதிகளிலும் மின்வாரியம் சார்பில் ஊழியர்கள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்றும் சில இடங்களில் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால் சில இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சென்னையில் 13.06.2024 (அதாவது இன்று) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக போரூர், பல்லாவரம், சோழிங்கநல்லூர், சிறுசேரி ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
அதன்படி போரூர்: (எல்கான், காடுவெட்டி) ஆவடி ரோட்டின் ஒரு பகுதி, மேட்டு தெரு, அம்பாள் நகர், வாணியர் தெர, பூந்தமல்லி புறவழிச்சாலை, எஸ்எஸ் கோவில் தெரு,
பல்லாவரம்: (கடப்பேரி) சங்கம் ரோடு, பொன்னப்பர் தெரு, அண்ணா சாலை, பாடசாலை தெரு, ப்ருகீஸ்டாட், எம்ஜிஆர் ரோடு, பிள்ளையார் கோவில் தெரு, ரெட்டைமலை ஸ்ரீநிவாசன் தெரு, மூவேந்தர் தெரு, பஜனை கோவில் தெரு, ரங்கசாமி தெரு, அர்கிஷ்வரர் காலனி, மதுவப்பா தெரு, வேலப்பர் தெரு, திருநீர்மலை மெயின் ரோடு, நாகல்கேனி.
சோழிங்கநல்லூர்: (எல்காட், சிறுசேரி) எல்காட் அவென்யு, கிளாசிக் பார்ம்ஸ் 1 முதல் 10 வது தெரு வரை, குமாரசாமி நகர், தாளம்பூர் வில்லேஜ், நத்தம் வில்லேஜ், தாளம்பூர் ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் தடைப்பட உள்ளது. இதனால் இந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மின்சாதனங்களை பயன்படுத்தி செய்ய வேண்டிய பணிகளை முடிந்தவரை காலை 9 மணிக்குள் முடித்து கொள்வது நல்லது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications