காத்து வரலனு கதவை திறந்து வைத்து தூங்கிய கோடம்பாக்கம் மக்கள்.. கடைசியில் இப்படி ஒரு ஷாக்.. உஷார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக வெயில் பொளந்து கட்டி வருகிறது. தலைநகர் சென்னையை பொறுத்த அளவில், சூரியன் இங்குதான் எங்கே சென்னைக்கு மிக அருகில் இருப்பதாக மக்கள் புலம்புகின்றனர். இப்படி இருக்கையில் இதனை பயன்படுத்தி சிலர் கைவரிசையில் ஈடுபட்டுள்ள சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

In Chennai, some miscreants broke into houses at night and stole cell phones etc

கத்திரி வெயில் பிறப்பதற்கு இன்னும் 22 நாட்கள் இருக்கையில் இப்போதே வெயில் தீவிரமாக வேலையை காட்டி வருகிறது. தமிழ்நாட்டின் பிரதான மாவட்டங்களான வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் வெயில் அசால்ட்டாக 90-100 டிகிரி பாரன்ஹீட் வரை கொளுத்தி வருகிறது. வெயில் மட்டுமல்லாது அனல் காற்றும் சேர்ந்து வீசுவதால் மக்கள் தவித்து வருகின்றனர்.

இந்த உஷ்ணம் வீட்டின் சுவர்களில் பொதிந்து, இரவு நேரங்களில் அப்படியே வெளியேறுவதால் வீட்டிற்குள் ஃபேன் போட்டால் கூட காற்று சில்லென வருவது கிடையாது எனவே, பெரும்பாலும் இரவு நேரங்களில் மக்கள் வீட்டிற்கு வெளியிலும், மொட்டை மாடியிலும் கட்டில் போட்டு மக்கள் தூங்க தொடங்கியுள்ளனர். ஆனால் சென்னை போன்ற பெரு நகரங்களில் மொட்டை மாடியுடன் வீடு கிடைப்பது அரிது. வீடுகள் நெரிசலாக இருப்பதால் மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர்.

சிலர் வேறு வழியின்றி வீட்டின் கதவுகளை திறந்து வைத்து தூங்கி வருகின்றனர். இப்படி இருக்கையில்தான் சில மர்மநபர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு தங்களது கைவரிசையை காட்டியுள்ளனர். பைக்கை சைட் லாக் போடாமல் அஞ்சு நிமிஷம் நிறுத்திவிட்டு சென்றால் அடுத்த 5 நிமிஷத்தில் அந்த பைக் எங்கிருக்கிறது என்பது கடவுளுக்கே தெரியாமல் செய்துவிடும் மேஜிக்கை கற்ற சிலர் மற்ற ஊர்களில் இருப்பதை போல சென்னையிலும் இருக்கிறார்கள். அப்படி இருக்கையில் வெப்பத்துக்கு பயந்து வெளிக்கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கினால் என்ன நடக்கும்?

ஆம் மக்களே! சென்னை கோடம்பாக்கம் சொர்ணாம்பிக்கை நகர் பகுதி மக்கள் என்ன நடக்கும் என்பதை அறிந்துள்ளார்கள். வழக்கம் போல நேற்று கொளுத்திய வெயில் இரவு 12 மணி வரை உஷ்ணத்தை வீட்டு சுவர்களில் எரிவிட்டுக்கொண்டிருந்தாதால் இந்த ஏரியா மக்கள் கதவுகளை திறந்து வைத்துவிட்டு படுத்திருக்கிறார்கள். நாள் முழுக்க வேலை பார்த்த அலுப்பு+நாளை காலை செய்ய வேண்டிய வேலையின் சுமை இரண்டும் தாங்காமல், படுத்தவாக்கில் தூங்கியிருக்கின்றனர்.

மணி நள்ளிரவு 12ஐ கடந்து 1..2.. என சென்றுக்கொண்டிருந்தது. காற்று குளிர்ந்து வீச தொடங்கியதால் தூக்கமும் உச்சத்தை எட்டியுள்ளது. அப்போது அடையாளம் தெரியாத கறுப்பு நிற உருவம் ஒன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நின்றிருந்திருக்கிறது. அந்த ஏரியா ஆட்களில் யாரோ ஒருவர் இதை பார்த்து பயந்து சைலன்ட்டாக கம்பளிக்குள் பதுங்கியுள்ளார். அடுத்த நாள் காலையில் வழக்கம்போல வண்டிகளின் ஹாரன் சத்தம் ஆட்களை எழுப்பிவிட மக்கள் கண்விழித்து பார்த்திருந்திருக்கின்றனர். அப்போதுதான் விஷயம் பிடிபட்டுள்ளது.

அதாவது முந்தைய நாள் இரவில் தலைக்கு அருகில் வைத்திருந்த செல்போன், இயர் பட்ஸ் மற்றும் பவர் பேங்க் போன்றவை திருடு போயுள்ளது. சிலரது வீட்டில் பணமும் காணாமல் போயுள்ளது. விஷயம் ஏரியா முழுக்க பரவ நேற்றிரவு சந்தேகத்திற்கிடமான உருவத்தை பார்த்தவர் அது குறித்து கூறியுள்ளார். இதனையடுத்து மூவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரையடுத்து காவல்துறையினர் இரவு நேரத்தில் ரோந்து பணியை தீவிரமாக்கியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+