கடையை எப்ப சார் திறப்பீங்க.. மதுரவாயல் ஆட்டோ டிரைவர் போனிலிருந்து போன் கால்.. இறுதியில் ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மதுரவாயலில் ஆலப்பாக்கம் மெயின் ரோடு பகுதியில் மீனாட்சி பல் மருத்துவக் கல்லூரி அருகே உள்ள டைம் ஸ்போர்ட்ஸ் எனும் ஸ்போர்ட்ஸ் கடை வைத்திருப்பவர் முகமது சலீம் இவரது கடையில் பேட் வாங்குவது போல் ஹெல்மெட் அணிந்து வந்த நபர் கிரிக்கெட் பேட்டை திருடி சென்ற சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டோ டிரைவர் போனிலிருந்து கடைக்காரருக்கு போன் கால் செய்து, கடை எப்ப சார் திறப்பீங்க என ஆசையாக கேட்டு ஆட்டையை போட்ட நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

சென்னை மதுரவாயில் ஆலப்பாக்கம் மெயின் ரோடு பகுதியில் மீனாட்சி பல் மருத்துவக் கல்லூரி அருகே உள்ள டைம் ஸ்போர்ட்ஸ் எனும் ஸ்போர்ட்ஸ் கடை வைத்திருப்பவர் முகமது சலீம். நேற்று மதியம் 12 மணியளவில் இவரது கடைக்கு கிரிக்கெட் பேட் பார்ப்பது போல், நம்பர் பிளேட் இல்லாத வாகனத்தில் நபர் ஒருவர் வந்துள்ளார். அவர் தலையில் அணிந்திருந்த ஹெல்மட்டை கழட்டாமல் கடைக்குள் நுழைந்து கிரிக்கெட் பேட்டை வாங்குவது போல் கடைக்காரரிடம் பேச்சுக் கொடுத்துள்ளார். அவர் அங்கு வைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் பேட் களை பார்த்து வந்துள்ளார்.

In Maduravoyal Chennai a man wearing a helmet stole a bat from a sports shop

அப்போது கடைக்கு வேறொரு வாடிக்கையாளர் வந்ததன் காரணமாக கடைக்காரர் அந்த வாடிக்கையாளரிடம் பேசிக் கொண்டிருந்தார். திடீரென இந்த மர்ம நகர் கடையில் இருந்த 20,000 மற்றும் 22,000 மதிக்கத்தக்க கிரிக்கெட் பேட்டுகளை திருடிக் கொண்டு கடையில் இருந்து தப்பித்து ஓடி உள்ளார் அப்போது ஒரு பேட் தவறுதலாக அங்கேயே விழுந்துள்ளது 22 ஆயிரம் மதிக்கத்தக்க கிரிக்கெட் பேட்டை மட்டும் திருடிக் கொண்டு நம்பர் பிளேட் இல்லாத வாகனத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். அந்த மர்ம நபரை கடைக்காரர் துரத்தி பிடிக்க முயற்சித்த போது அவர் வாகனத்தை எடுத்துக் கொண்டு சென்றது தெரியவந்துள்ளது அதன் பிறகு போலீசாருக்கு கடைக்காரர் தகவல் அளித்துள்ளார்.

பல நாள் இந்த ஸ்போர்ட்ஸ் கடையை நோட்டமிட்ட அந்த நபர் திருடுவதற்கு முன்பு அந்தப் பகுதியில் இருந்த ஆட்டோ டிரைவர் ஒருவரிடம் தொலைபேசியை வாங்கி கடை வெளியே உள்ள பேனரில் இருக்கக்கூடிய நம்பருக்கு போன் செய்து கடை எப்போது திறப்பீர்கள் என கேட்டிருக்கிறார்.இந்த சம்பவத்திற்கு பிறகு கடைக்காரர் அந்த நம்பருக்கு போன் செய்து கேட்டபோது அது ஒரு ஆட்டோ டிரைவரின் தொலைபேசி எண் என்பதும் அவ்வழியாக வரும்போது அந்த நபர் ஆட்டோக்காரரிடம் இருந்து போனை வாங்கி கடைக்காரருக்கு போன் செய்து விசாரணையில் தெரியவந்துள்ளது.

கிரிக்கெட் பேட் வாங்குவது போல் அன்பாக பேசி திருடிக் கொண்டு பரபரப்பாக ஓடக்கூடிய சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தற்போது இது போல் ஒரு கும்பல் புது வகையில் திருடுவதை சிலர் செய்ய துவங்கி உள்ளதாக கூறப்படுகிறது.குறிப்பாக ஸ்போர்ட்ஸ் கடைகளை குறிவைத்து தொடர்ந்து இது போன்ற திருட்டு சம்பவம் நடைபெற்று வருவதாக ஸ்போர்ட்ஸ் கடை உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து கடை உரிமையாளர் முகமது சலீம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் மதுரவாயில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+