Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் குட்கா, பான்மசாலா, புகையிலைகளுக்கு தொடரும் தடை! மீறினால் அவ்வளவுதான்-எச்சரித்த அமைச்சர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது தமிழ்நாட்டில் குட்கா, பான்மசாலா, புகையிலை பொருட்கள் மீதான தடை தொடர்கிறது. இதனை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை செய்தார். இதனால் அனைவரும் கவனமாக இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ் குட்கா, பான் மசாலா, சுவையூட்டப்பட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான உத்தரவை உணவு பாதுகாப்பு துறை ஆணையர் பிறப்பித்தார்.

இதையடுத்து தமிழ்நாட்டில் குட்கா, பான்மசாலா, சுவையூட்டப்பட்ட புகையிலை பொருட்களுக்கு தடை விழுந்தது. இதனை மீறுவோர் மீது குற்ற நடவடிக்கை, அபராதம் எடுக்கப்பட்டது. இதையடுத்து தடைக்கு எதிராகவும், தடையை மீறியவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதமன்றம், உணவு பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்வதற்காக கொண்டு வரப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தில் புகையிலையை உணவுப்பொருளாக சுட்டிக்காட்டவில்லை. இதனால் புகையிலைப் பொருட்களுக்கு முழு தடை விதிக்க சட்டம் வழிவகை செய்யவில்லை. தடை விதிக்கும் அதிகாரமும் இல்லை எனக்கூறி தடையை ரத்து செய்து உத்தரவிட்டது.

In Tamil Nadu has been Gutka PanMasala and Tobacco bans, says Minister Ma Subramanian

இந்த வழக்கை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு மற்றும் புகையிலை நிறுவனங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தன. புகையிலைப் பொருட்களுக்கு தடை விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என புகையிலை நிறுவனங்கள் வாதத்தை முன் வைத்தன.

தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மக்களின் நலன் கருதி இது போன்ற ஆணையை பிறப்பித்திருக்கிறார்கள் என்றும் புகையிலை பொருட்களுக்கான தடை உத்தரவு சரிதான் எனவும் வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து வந்த உச்சநீதிமன்றம், தமிழ்நாடு அரசின் ஆணையை ரத்து செய்த சென்னை உச்சநீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் இந்த ஆணையால் பாதிக்கப்பட்ட புகையிலை நிறுவனங்களுக்கு வேறு ஏதேனும் நிவாரணம் வேண்டுமென்றால் சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் முறையிடவும் புகையிலை நிறுவனங்களுக்கு வாய்ப்பளித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் புகையிலை பொருட்கள் மீதான தடை தொடர்ந்து நீட்டிக்கப்படுகிறது. இதனால் குட்கா, பான்மசாலா, புகையிலை பொருட்கள் மீதான தடை தொடர்கிறது. இந்த தடையை மீறி விற்பனை செய்வோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+