தமிழகத்தில் ஒரே நாளில் 1568 பேருக்கு கொரோனா.. எச்சரிக்கை மணி அடிக்கும் கோவை!

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 1568 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் கொரோனா பாதிப்பில் இருந்து 1657 பேர் ஒரே நாளில் மீண்டனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. மே இரண்டாவது வாரத்தில் 36 ஆயிரம் என்கிற அளவில் தினசரி பாதிப்பு இருந்தது. ஆனால் தற்போது 1500 ஆக கீழ் குறைந்துள்ளது. எல்லா மாவட்டங்களிலுமே பாதிப்பு குறைந்துவிட்டது. எனினும் கேரளாவை ஒட்டி உள்ள கோவை, கன்னியாகுமரி, தேனி, நீலகிரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் செப்டம்பர் 3ம் தேதியான இன்று கொரோனா தொற்றால் 1568 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 26,19,511 ஆக உயர்ந்துள்ளது.

எவ்வளவு

எவ்வளவு

அதேநேரம் கொரோனா பாதிப்பில் இருந்து 1,657பேர் ஒரே நாளில் மீண்டனர். இதனால் ஒட்டுமொத்தமாக கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 25,68,161 ஆக உயர்ந்துள்ளது.

 உயிரிழப்பு எவ்வளவு

உயிரிழப்பு எவ்வளவு


தமிழகத்தில் கொரோனா காரணமாக ஒரே நாளில் 19பேர் மரணம் அடைந்துள்ளனர்.இதனால் இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 34,980 ஆக உயர்ந்துள்ளது.

சரிந்தது

சரிந்தது

தமிழகத்தில் தற்போதைய நிலையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிரடியாக குறைந்து 16 ஆயிரத்திற்கு சரிந்துள்ளது . தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணக்கை 16,478ல் இருந்து 16,370 ஆக சரிந்தது

எவ்வளவு

எவ்வளவு

தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 239 பேரும், சென்னையில் 162 பேரும், ஈரோட்டில் 125 பேரும், தஞ்சாவூரில் 108 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை 100க்கும் கீழாக உள்ளது. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் கோவையில் மட்டும் அதிகமாக 2134 பேர் உள்ளனர். அதை தொடர்ந்து சென்னை, ஈரோடு, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கு மேல் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+