Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஆட்டுக்குட்டியும் திமுகவும்".. "அறிவாலயம்" ஒன்று நினைக்க.. திருப்பி போட்டு அசரடிக்கும் "கமலாலயம்"

திமுகவை டேமேஜ் செய்ய அடுத்த ஐடியாவை பாஜக யோசித்து வருகிறதாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக ஒன்று யோசித்தால், அவர்களே அசந்து போகும் அளவுக்கு தமிழக பாஜக வேறு ஒன்று யோசித்து அசரடித்து விடுகிறது.. அப்படி ஒரு செய்திதான் வட்டமடித்து கொண்டிருக்கிறது.

விரைவில் எம்பி தேர்தல் வரஉள்ளது.. இந்த தேர்தலின் வெற்றிக்காக இப்போதே தமிழக பாஜக தயாராகி வருகிறது.

நகர்ப்புற தேர்தல் தந்த உற்சாக முடிவையடுத்து, தீவிரமான களப்பணியை கையில் எடுத்துள்ளதுடன், அடிமட்டத்தையும் பலப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது.

அமித்ஷா

அமித்ஷா

ஏற்கனவே உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக பாஜகவுக்கு ஏராளமான ஐடியாக்களை தந்துள்ளார்.. சமீபத்தில்கூட, "புதிதாக எந்த யுக்தியையும் எடுக்க வேண்டாம், இப்போதுள்ள பாணி அரசியலையே, எம்பி தேர்தல் வரை கொண்டு செல்லுங்கள்" என்று ஏற்கனவே டெல்லி மேலிடம் அறிவுறுத்தியிருந்த நிலையில், தமிழக பாஜகவும் அதன்படியே அரசியல் செய்து வருகிறது.. பிரதமர் மோடி ஆட்சியில் பாஜகவின் சாதனைகளை விளக்கி மக்களிடம் நெருங்க ஆரம்பித்துள்ளது..

 டேமேஜ் திமுக

டேமேஜ் திமுக

மற்றொரு புறம் திமுகவை டேமேஜ் செய்து, அக்கட்சி மீதான புகார்களை மக்களிடம் கொண்டு செல்கிறது.. அதாவது தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக இருந்தபோதிலும்கூட, பாஜகதான் முக்கிய எதிர்க்கட்சி போல செயலாற்றி கொண்டிருக்கிறது.. மின் துறையில் தனியார் நிறுவனத்திற்கு தரப்பட்ட டெண்டர் விவகாரமாகட்டும், முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தின் துபாய் பயணமாகட்டும், பள்ளி மாணவிகளின் மர்ம மரணங்களாகட்டும், அனைத்தையும் கிண்டி எடுத்து கேள்வி கேட்டு வருகிறது..

 புள்ளிவிவரங்கள்

புள்ளிவிவரங்கள்

போதாக்குறைக்கு திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டங்களையும் அறிவித்து, அதை நடத்தியும் வருகிறது.. இவைகள் எல்லாம் திமுகவுக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றன.. சரியான பதிலடிகளையும், தர்க்க ரீதியான வாதங்களையும், புள்ளிவிவரங்களுடன் கூடிய தரவுகளை அமைச்சர்களும், திமுக நிர்வாகிகளும் அவ்வப்போது அளித்து வந்தபோதிலும்கூட, ஆட்டுக்குட்டியை வைத்து அண்ணாமலையை விமர்சிக்க திமுகவின் அடிமட்டத்தில் சிலர் யோசித்து வருவதாக கூறப்படுகிறது.

 துணிச்சல் பாஜக

துணிச்சல் பாஜக

இதற்கு காரணம், அன்று ஐபிஎஸ் அதிகாரி பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற அண்ணாமலை, தன்னுடைய சொந்த கிராமத்தில் ஆடுகளை வளர்த்து வந்தார்... அதனாலேயே அவரை ஆட்டுக்குட்டி அண்ணாமலை என்றும் கிண்டல் செய்து வருகிறார்கள்.. ஆனால், தன் மீதான விமர்சனங்களையும் அண்ணாமலை தக்க பதிலடி தந்து முறியடித்து கொண்டிருக்கிறார்.. பதவியை துறந்துவிட்டு, ஆட்டுக்குட்டியை ஏந்திய ஒரு ஐபிஎஸ் அதிகாரியின் துணிச்சலை பாஜக வியந்து பார்த்தது..

 பரிசாக ஆட்டுக்குட்டி

பரிசாக ஆட்டுக்குட்டி

மாநில தலைமை பொறுப்பு வந்த சமயம், தற்சார்பு விவசாயம், இயற்கை வேளாண்மை, ஆட்டுக்குட்டி வளர்ப்பு எல்லாம் இனி அவ்வளவுதானா என்று ஒருமுறை செய்தியாளர்கள் இவரிடம் கேட்டனர்.. அதற்கு, அதையும் பார்ப்பேன் இதையும் பார்ப்பேன் என்று துணிந்து பதில் சொன்னார் அண்ணாமலை. அதுமட்டுமல்ல, தனக்கு கட்சியினர் ஆட்டுக்குட்டியை பரிசளித்தபோது, ஆஸ்கர் விருது பெற்றதுபோல மகிழ்ந்தேன் என்று அண்ணாமலை பூரித்து சொல்லியிருந்தார்.. இந்நிலையில்தான், ஆட்டுக்குட்டியை வைத்து அண்ணாமலையை மீண்டும் சீண்ட திமுக யோசித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

 ஆட்டுக்குட்டி

ஆட்டுக்குட்டி

இருந்தாலும், இந்த யுக்தியை முறியடிக்க தமிழக பாஜகவே தயாராகிவிட்டதாம்.. அதாவது, இனி அண்ணாமலை பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், சால்வை, மாலைக்கு பதிலாக ஆட்டுக்குட்டியை பரிசளிக்க பாஜகவினர் முடிவு செய்திருக்கிறார்களாம்.. இப்படி தனக்கு பரிசாக கிடைக்கும் ஆட்டுக் குட்டிகளை ஏழைகளுக்கு இலவசமாக வழங்க, அண்ணாமலை முடிவு செய்துள்ளாராம்.. அதாவது, தன்மீதான விமர்சனத்தை, மனமுவந்து எதிர்கொண்டு, அதை திமுக பக்கமே திருப்பிவிடும் புது டெக்னிக்கைதான் பாஜக பிளான் செய்ய போகிறதாம்..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+