சென்னைக்கு விடிவுகாலம்.. தாழ்தளப் பேருந்துகள் எந்தெந்த ரூட்டுகளில் இயக்கப்படும்..வந்தாச்சு அறிவிப்பு
சென்னை: சென்னையில் பயன்பாட்டுக்கு வந்துள்ள தாழ்தள பேருந்துகள் எந்தெந்த வழித்தடங்களில் இயக்கப்படவுள்ளது என்ற விவரங்களை மாநகரப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது.
சென்னையில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கல்வி, தொழில், வேலைவாய்ப்பு, மருத்துவம் என அனைத்து வசதிகளையும் கொண்டதாக சென்னை விளங்குகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்துப் பகுதி மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வசதிகள் இங்குள்ளன.

சென்னையில் பொதுமக்களின் போக்குவரத்து தேவையைப் பூர்த்தி செய்வதில் பேருந்துகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதிலும், வார இறுதி நாள்களிலும், தொடர் விடுமுறை நாள்களிலும், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதால் மக்கள் முன்பைவிட அதிக அளவில் அரசு விரைவுப் பேருந்துகளை பயன்படுத்துவதால், பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, புதிய பேருந்துகள் அதிக அளவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.. இதற்காகவே ஏராளமான பேருந்துகளும் வாங்கப்பட்டு வருகின்றன. சென்னையில் குறுகிய சாலைகளில் பயணிக்க முடியாதது உள்ளிட்ட காரணங்களால் 6 ஆண்டுகளுக்கு முன்பு, தாழ்தளப் பேருந்து சேவை நிறுத்தப்பட்டன. ஆனால், மாற்றுத் திறனாளிகள் பயனடையும் வகையில் மீண்டும் தாழ்தளப் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.
இதையடுத்து, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய 611 தாழ்தளப் பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் முதல்கட்டமாக 58 பேருந்துகளை கடந்த உதயநிதி ஸ்டாலின் கடந்த மாதம் தொடங்கி வைத்தார். இந்த தாழ்தள பேருந்துகளில் இறங்கு தளத்தின் உயரத்தை 60 மி.மீ. குறைத்து (kneeling) பயணிகள் ஏறிய பிறகு, பழைய உயரத்துக்கு மாற்றிக் கொள்ளும் வசதி உள்ளது.
அதேபோல, மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியுடன் ஏறி, இறங்குவதற்கு சாய்தள வசதி, மாற்றுத் திறனாளிகள் சக்கர நாற்காலியுடன் ஏறி இறங்குவதற்கு சாய்தள வசதி என பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இதைத்தொடா்ந்து, பல்வேறு கட்டங்களாக இதுவரை 228 தாழ்தள பேருந்துகள் சென்னை மாநகரில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்தப் பேருந்துகள் எந்தெந்த ரூட்டுகளில் இயங்கவுள்ளது என்று போக்குவரத்துக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பேருந்துகள் வழித்தட எண் 19, 70, 72, 101, 102, 104, 109, 113, 121, 154, 242, 515, 583, 588, 102 எக்ஸ், 104 சி, 104 சிஎக்ஸ், 104 கே, 104 டி, 18 ஏஎக்ஸ், 21ஜி, 27 பி, 40 ஏ, 515 கே, 515டி, 51ஏ, 51ஏஎக்ஸ், 570 பி, 6டி, 70ஜி, 70 டி, 70வி, 7எச், 91வி, ஏ51, டி70, இ18, எம்70, டி29சி ஆகிய ரூட்டுகளில் இயக்கப்படவுள்ளதாக மாநகா் போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாழ்தள பேருந்துகள் மாற்றுத் திறனாளிகளுக்கு பேருந்து போக்குவரத்தை மிகவும் எளிமையாக்குவதுடன், கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதால் பொதுமக்களின் போக்குவரத்து தேவையும் பூர்த்தி செய்யப்படும். இதனால் சென்னை மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
-
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னை மக்கள் பொறுமை இழந்தனர்.. கட்டி முடிச்சு 4 மாசமாச்சு.. எப்ப தான் திறப்பீங்க! -
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications