கமல்ஹாசனின் கையில் மூன்று தொகுதிகள்... வெற்றிவாய்ப்பு குறித்து அலசி ஆராயும் பிரத்யேக குழு..!
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுவதற்காக 3 தொகுதிகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
வெற்றிவாய்ப்பு, வாக்காளர்கள் நிலவரம், தொகுதிப்பிரச்சனைகள் குறித்தெல்லாம் பிரத்யேக குழு ஒன்று கமலுக்காக ஆராய்ந்து வருகிறது.
வரும் ஜனவரி மாதம் இறுதிக்குள் கூட்டணி விவகாரத்தில் கமல் இறுதி முடிவு எடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால் அதற்கு பிறகு தாம் போட்டியிடும் தொகுதியை அவர் தேர்வு செய்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

முதல் தேர்தல்
மக்கள் நீதி மய்யம் முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலை சந்திக்கவுள்ளது. இதற்கு முன் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் களம் கண்டது. இந்த முறை சட்டமன்றத் தேர்தல் என்பதால் மிகுந்த கவனத்துடனும், முன்னெச்சரிக்கையுடன் தனது ஒவ்வொரு அடியையும் பார்த்து பார்த்து வைத்து வருகிறது.

மிகுந்த கவனம்
அந்த வகையில் அந்தக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தாம் போட்டியிடும் தொகுதியில் வெற்றிபெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இதனால் தொகுதி தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். சென்னை, மதுரை, ராமநாதபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் மூன்று தொகுதிகளை கமல் பரிசீலித்து வருவதாக தெரிகிறது.

வேளச்சேரி தொகுதி
சென்னையை பொறுத்தவரை கமல் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுவார் எனக் கூறப்பட்டாலும் மநீம வினர் அதனை நமக்கு உறுதிப்படுத்தவில்லை. மாறாக வேளச்சேரி தொகுதி கமலின் சாய்ஸ்களில் ஒன்றாக இருக்கிறதாம். காரணம் அங்கு ஐடி துறை பணியாளர்கள், படித்தவர்கள், குறிப்பாக இளம் வாக்காளர்கள் அதிகம் உள்ளது தொகுதி என்பது தான். கமல் சென்னை மாவட்டத்திற்குள் போட்டியிட விரும்பினால் அவரது தேர்வு வேளச்சேரியாக தான் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

ராமநாதபுரம்
ஒருவேளை அவர் சென்னையை தவிர்த்து பிறமாவட்டங்களில் போட்டியிட விரும்பினால் சொந்த மாவட்டமான ராமநாதபுரம் அவரது அடுத்த சாய்ஸாக உள்ளதாம். இதேபோல் தனது மக்கள் நீதி மய்யத்தை தொடங்கிய மதுரை மண் மீதும் கமலுக்கு ஒரு கண் இருக்கிறது. அண்மையில் இவர் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியதும் இதே மதுரையில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications