எந்தத் துறைகளில் எல்லாம் தமிழ்நாடுதான் No 1.. தெரியுமா உங்களுக்கு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பல துறைகளில் தமிழ்நாடு முதல் இடத்தில் இருக்கிறது. அது பற்றி உங்களுக்கு ஏதேனும் தெரியுமா? அதற்கான ஆர்வம் உள்ளார்கள் இந்தக் கட்டுரைக்குள்ளே தயங்காமல் படிக்கத் தொடங்கலாம்.

கல்வியில் சிறந்த தமிழ்நாடு:

In which sectors Tamil Nadu has got No.1 rank

கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற பாரதியின் கனவு உண்மையாகி இருக்கிறது. பாலின அடிப்படையில் பாரத்தால், உயர்கல்வி பெறுபவர்களில் சுமார் 51.3% ஆண்களாக இருக்கிறார்கள் என்கிறது Gender Parity Index. அதாவது பாலின சமநிலை குறியீட்டு அறிக்கை.

அப்படி என்றால் 2.12 கோடி பேர். இதில் பெண்களின் நிலை என்ன என்று உடனே நமக்குள் ஒரு கேள்வி எழும். இதே அறிக்கையின்படி 48.7% பேர் பெண்களாக உள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது. அப்படிப் பார்த்தால் 2.01 கோடி அதில் பெண்கள்.

இந்திய அளவில் உயர்கல்வி பாலின சமநிலை குறியீடு 1.5 ஆக அதிகரித்துள்ளது. 100 ஆண்களுக்கு 105 பெண்கள் உயர்கல்வி பெற்று வருகின்றனர்.

கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று நாம் தாராளமாகச் சொல்லலாம்.

In which sectors Tamil Nadu has got No.1 rank

தமிழ்நாட்டில் 2020-21 கல்வியாண்டில் மட்டும் சுமார் 34,411 பேர் பிஹெச்டி படிப்பில் சேர்ந்திருப்பதாகக் கடந்த பிப்ரவரியில் வெளியான ஏஐஎஸ்ஹெச்இ (AISHE) அறிக்கையின் மூலம் தெரியவந்தது.

அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவலின்படி, 17,443 பேர் ஆண்கள் என்றும் 16,968 பேர் பெண்கள் என்றும் தெரியவந்துள்ளது. பிற மாநிலங்களோடு ஒப்பிடும் போது தமிழ்நாட்டில்தான் அதிக அளவிலான பெண்கள் பிஹெச்டி படிப்பில் சேர்ந்திருக்கிறார்கள்.

ஆக, உயர்கல்வியைத்தாண்டி பிஹெச்டி போன்ற படிப்புகளிலும் தமிழ்நாட்டை அடித்துக்கொள்ள முடியாது என்றே புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.

இப்போது வெளியாகி உள்ள UDISE அறிக்கையின் படி தமிழ்நாட்டில் பெண் பிள்ளைகளின் இடைநிற்றல் விகிதாச்சாரம் குறைந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. அது என்ன UDISE எனக் கேட்பவர்களுக்கு, அப்படி என்றால் Unified District Information System for Education.

இதன் 2021-22 ஆம் ஆண்டுக்கான அறிக்கையின் படி நாட்டிலேயே பெண் பிள்ளைகளைப் பள்ளியில் படிக்கவைக்கும் முயற்சிகள் நல்ல பலனளித்திருப்ப தாக கூறப்பட்டுள்ளது.

பெண்கள் கல்விகற்பதற்கான தகுதியுடையவர்கள் என்பதைத் தமிழ்நாடு அரசு உறுதி செய்துள்ளது. அந்த முன்னெடுப்புகளும் இதில் முக்கிய பங்குவகித்துள்ளன.

In which sectors Tamil Nadu has got No.1 rank

பிறமாநிலங்களின் நிலைமை:

unified district information system for education plus (udise+) 2021-22 இன் அறிக்கையின்படி செகண்டரி எடுகேஷனை (9-10) பொறுத்தவரை மிகவும் மோசமான இடைநிற்றல் அதிகமாக உள்ள மாநிலமாக ஒடிசா இடம்பிடித்துள்ளது.

ஏறக்குறையை இங்கு 25.2% ஆக உள்ளது. இதற்கு அடுத்த நிலையில் பீகார் மாநிலம் உள்ளது. 21.4%. அசாமில் 20.7%. மேகாலயா 20.4%, மேற்கு வங்கம் 17.7%, நாகாலாந்து 16.2%, பஞ்சாப் 16%, குஜராத் 15.9% என்று அந்த அறிக்கை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையின்படி தமிழ்நாட்டில் இடைநிற்றல் என்பது 2.5%தான். நம் மாநிலத்திற்குக் கீழாக மணிப்பூரும் இமாச்சல் பிரதேசமும் உள்ளது. மணிப்பூரில் 1.2%தான். இமாச்சலில் அதைவிடக் குறைவாக 0.9தான் உள்ளது.

நம்மைவிட அதிகமாகக் கேரளாவும் பாண்டிச்சேரியிலும் பெண் பிள்ளைகளின் இடைநிற்றல் என்பது அதிக அளவில் பதிவாகி உள்ளது. கேரளாவிலும் பாண்டிச்சேரியிலும் 4.1% என்ற அளவில் சமநிலையில் புள்ளிகள் கிடைத்துள்ளன.

சானிட்டரி நாப்கின் பேக் மூலம் சுகாதாரம்:

In which sectors Tamil Nadu has got No.1 rank

இளம்பெண்களுக்கு (10-19) இளம் பெண்களுக்கு சானிட்டரி நாப்கின் பேக் வழங்கி சுகாதாரம் பேணுவதிலும் தமிழ்நாடுதான் முதல் இடத்தில் உள்ளதாக HMIS, Ministry of Health and Family Welfare 2022-23 நிதியாண்டுக்கான அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

இந்திய லவில் 2.31% என்ற அளவில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. அடுத்ததாக ஆந்திராவும் ஒடிசாவும் உள்ளன. இதில் மிக மோசமான குறியீட்டில் லடாக் உள்ளது.

இதைப்போல் ஆர்.பி.ஐ வெளியிட்டுள்ள States Expenditure on Infrastructure Research 2022-23 (State Finances- A Study of Budgets of 2023-24, RBI) அறிக்கையின்படி உட்கட்டமைப்பை உருவாக்கு தொடர்பாக ஆய்வுசெய்வதில் அர்ப்பணிப்புடன் இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் தமிழ்நாடு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உட்கட்டமைப்பு ஆய்வுகளுக்காகத் தமிழ்நாடு குறிப்பிட்ட நிதியாண்டில் மட்டும் 97.8 கோடி ரூபாயைச் செலவிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. நமக்கு அடுத்த நிலையில் ஒடிசா மாநிலம் 90.1 கோடியைச் செலவிட்டு 2வது இடத்தில் இடம்பிடித்துள்ளது.

மூன்றாம் இடத்தில் உள்ள ராஜஸ்தான் 49.7கோடியை ஆய்வுக்காகச் செலவிட்டுள்ளது. ஹரியானா 28.9கோடியும் ஜம்மு&காஷ்மீர் 25.3 கோடியையும் மேற்கு வங்கம் 7 கோடியையும் செலவிட்டுள்ளன.

சைபர் க்ரைம் துறையில் நம்பர் 1:

Ministry of Home- Affairs வெளியிட்டுள்ள 2022 ஆண்டுக்கான அறிக்கையின்படி மாநிலம்வாரியான சைபர் க்ரைம் சார்ந்த தாக்குதல்களைக் கண்டறிவதற்காகத் தனி காவல்நிலையங்களை அமைத்ததில் தமிழ்நாடுதான் முதல் இடத்தில் உள்ளது.

அதாவது, சைபர் க்ரைம் தாக்குதல்கள் குறித்த ஆய்வில், உலகம் முழுவதும் நடக்கும் சைபர் தாக்குதல்களில் 13.7% இந்தியாவை நோக்கியே நடத்தப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

In which sectors Tamil Nadu has got No.1 rank

ஆகவே, அந்தக் குற்றங்கள் குறித்து இந்திய அளவில் அதிக அக்கறையுடன் தமிழ்நாடு செயல்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களைவிட அதிக அளவிலான காவல்நிலையங்களைத் தமிழகம் ஏற்படுத்தியுள்ளது. மொத்தமாக 46 காவல்நிலையங்கள் இதற்காகத் தமிழகத்தில் இயங்கி வருகின்றன.

நம் மாநிலத்திற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. இங்கே 43காவல்நிலையங்கள் உள்ளன. இதில் அக்கறையே எடுத்துக்கொள்ளாத மாநிலங்களாக அசாம், சத்திஷ்கர், பீகார், சிக்கிம், திரிபுரா, லட்ச தீவு, சண்டிகர், லட்சாக், டையு &டாமன், அருணாசலப் பிரதேசம் எனப் பல மாநிலங்கள் உள்ளன.

இங்கே எல்லாம் ஒரு காவல்நிலையம் கூட சைபர் குற்றங்களுக்காக அமைக்கப் படவில்லை. அதைவிட இதில் ஆச்சரியம் டெல்லியில் கூட சைபர் குற்றங்களுக்காகத் தனி காவல்நிலையம் இல்லை என்று அதிர்ச்சி தருகிறது இந்த அறிக்கை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+