நிர்மலா சீதாராமன் வெளியிட்ட வருமான வரி அடுக்கு மாற்றத்தால் யாருக்கு எல்லாம் நன்மை?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிப்ரவரி 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் 2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சூப்பர் அறிவிப்பை வெளியிட்டார். நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் சம்பளம் வாங்கும் வரி செலுத்துவோருக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும விதமாக ₹12 லட்சம் வரை (சம்பளம் வாங்கி வரி செலுத்துவோருக்கு ₹12.75 லட்சம்) வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி இல்லை என்றார். அத்தோடு வரி அடுக்கையும் மாற்றினார். இந்த வரி அடுக்கு மாற்றத்தால் யார் அதிக பயனடைய வாய்ப்பு உள்ளது என்று பார்ப்போம்.


பிப்ரவரி 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் 2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடுத்தர வர்க்கத்தினரை குறிவைத்து பட்ஜெட்டில் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் பாதிப்புகளை எதிர்கொண்ட வருமான வரியை கணிசமாக குறைத்தார். இதன்படி, ₹12 லட்சம் வரை (சம்பளம் வாங்கி வரி செலுத்துவோருக்கு ₹12.75 லட்சம்) வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி இல்லை என்றார்.

budget 2025 union budget 2025 income tax nirmala sitharaman 2025

இதன் மூலம் நடுத்தர வர்க்கத்தினர் கையில் சுமார் ஒரு லட்சம் கோடி பணம் இனி அடுத்த ஒரு நிதியாண்டில் புழங்க போகிறது. இந்த பணத்தை வைத்து அவர்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். சேமிக்க முடியும், முதலீடு செய்ய முடியும். அதேநேரம் மத்திய அரசு இந்த பட்ஜெட்டில் வருமான வரி தொடர்பாக புதிய வரி அடுக்குகளை உருவாக்கி உள்ளது.இந்த மாற்றம் காரணமாக இதுவரை பழைய வரி றையில் இருந்த எல்லாருமே புதிய வரி முறைக்கு மாற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வருமான வரி புதிய முறை:

4-8 லட்சம் ரூபாய்: 5%

8-12 லட்சம் ரூபாய்: 10%

12-16 லட்சம் ரூபாய்: 15%

16-20 லட்சம் ரூபாய்: 20%

20-24 லட்சம் ரூபாய்: 25%

24 லட்ச ரூபாய்க்கு மேல்: 30%


புதிய வருமான வரி வரம்பு எவ்வாறு செயல்படும்:

புதிய வரி விதிப்பின் கீழ், ஆண்டுக்கு ₹12 லட்சம் வரை வருமானம் ஈட்டும் தனிநபர்கள் இனி எந்த வருமான வரியும் செலுத்த வேண்டியதில்லை. ரிபேட் மூலமாக அந்த வருமான வரியை அரசு தள்ளுபடி செய்துவிட்டது. அதாவது 4 லட்சம் முதல் 12 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோர் கட்ட வேண்டிய வருமான வரித்தொகையை அரசு தள்ளுபடி செய்துவிட்டது. இதுதவிர மாத சம்பளம் வாங்குவோருக்கு நிலையான கழிவுத்தொகையாக 75 ஆயிரம் தருகிறத. எனவே இதன்படி பார்த்தால் 12.75லட்சம் வருமானம் ஈட்டுவோர் வரி கட்ட தேவையில்லை.

அதேநேரம் புதிய வரி விதிப்பின்படி ஆண்டுக்கு ₹12 லட்சத்திற்கு ( சம்பளம் வாங்குவோர்12.75 லட்சம்) மேல் வருமானம் ஈட்டும் நபர்களுக்கு, ₹4 லட்சம் வரை வருமானத்திற்கு பூஜ்ய வரியும், ₹4 முதல் 8 லட்சம் வரை வருமானத்திற்கு 5 சதவீதமும், ₹8-12 லட்சத்திற்கு 10 சதவீதமும், ₹12-16 லட்சத்திற்கு 15 சதவீதமும் வரி விதிக்கப்படும். ₹16 முதல் 20 லட்சம் வரை வருமானத்திற்கு 20 சதவீதமும், ₹20-24 லட்சத்திற்கு 25 சதவீதமும், ₹24 லட்சத்திற்கு மேல் 30 சதவீதமும் வருமான வரி விதிக்கப்படும்.


வருமான வரி பட்ஜெட் 2025 சிறப்பம்சங்கள்:


மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் 2025 அறிவிப்பு மூத்த குடிமக்களுக்கு சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. மூத்த குடிமக்கள் பெறும் வட்டிக்கு TDS-க்கு வட்டி செலுத்துவதற்கான வரம்பை இரட்டிப்பாக்கி உள்ளது. இதன்படி மூத்த குடிமக்கள் டெபாசிட் செய்த பணத்திற்கு ஆண்டுதோறும் வங்கி, சங்கம் அல்லது தபால் நிலையத்தில் சுய அறிவிப்பு படிவங்களை (படிவம் 15(H)) தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை, தொகை அந்த வரம்பிற்குக் கீழே இருந்தால் வட்டிக்கு வரியைக் கழிக்க வேண்டாம். தற்போது, வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் சுய அறிவிப்பு தாக்கல் செய்யப்படாவிட்டால் வரியைக் கழிக்கின்றன. மேலும் மொத்த வருமானம் வரி விதிக்கக்கூடிய வரம்பிற்குக் கீழே இருக்கும்போது வைப்புத்தொகை வைத்திருப்பவர் பணத்தைத் திரும்பப் பெற வேண்டிய நிலை இருந்தது. இனி அது தேவையில்லை..


வருமான வரி காலக்கெடு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில். புதுப்பிக்கப்பட்ட வருமானத்தை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை தற்போதைய இரண்டு ஆண்டுகளில் இருந்து நான்கு ஆண்டுகளாக நீடித்துள்ளார். தற்போதைய நிலையில் வருமான வரி செலுத்துவோர் ₹1 லட்சம் வருமானத்தை அறிவிக்கத் தவறிவிட்டார்கள் என்றால், அதற்கு ₹30,000 வரி மற்றும் ₹10,000 வட்டி செலுத்த வேண்டும், இப்போது அவர்களுக்கு புதுப்பிக்கப்பட்ட வருமானத்தை தாக்கல் செய்ய இன்னும் இரண்டு ஆண்டு கால கூடுதல் அவகாசம் கிடைத்துள்ளது.


நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் வரி அடுக்கு மாற்றத்தால் யார் அதிகம் பயனடைய வாய்ப்பு:

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்த வருமான வரி அடுக்கு மாற்றத்தால் ஒரு லட்சம் வரை சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்கள் உள்பட நாட்டில் உள்ள சுமார் 2 கோடிக்கும் அதிகமானோர் பயன்பெறுவார்கள். நமது நாட்டில் அரசு ஊழியர்கள் அதிக பட்ச சம்பளமாக ஓய்வு நெருங்கும் காலக்கட்டத்தில் தான் சுமார் ஒரு லட்சம் என்கிற சம்பளத்தை எட்டுகிறார்கள். கிட்டத்தட்ட 99 சதவீத அரசு ஊழியர்கள் வருமான வரி அடுக்கு மாற்றத்தால் பயன்பெறுவார்கள். தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பல அதிகாரிகள், ஐடி நிறுவன ஊழியர்கள் பயன்பெறுவார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+