Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வருமான வரித்துறை அதிரடி.. இன்னும் வருமான வரி கட்டலையா? இந்த முகவரியை நோட் பண்ணுங்க.. திடீர் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: வருமான வரித்துறை புதிய அதிரடியை கையில் எடுத்துள்ளது.. இதுகுறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது.

வருமான வரி விதிகளின்படி, வரிக்கு உட்பட்டவர்கள் ஆண்டுதோறும் வருமான வரி மற்றும் அதன் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பது அடிப்படை விதியாகும். அவ்வாறு வருமான வரி செலுத்தாவிட்டால், அது வரி ஏய்ப்பு என்று சொல்லப்படுகிறது.

Income Tax Department and Advice on checking income tax though the Online, Major Announcement

வருமான வரியை யார் யார் கட்ட வேண்டும்? எவ்வளவு கட்ட வேண்டும்? என்பது குறித்த தேவையான நடைமுறைகளை வருமான வரித்துறை நிர்ணயம் செய்துள்ளது.. இந்த வருமான வரியை தாக்கல் செய்வதற்காகவே இணைய தள பக்கங்கள் உள்ளன.. ஒருவேளை இணைய பக்கத்தில் சில தொழில்நுட்ப கோளாறுகள் இருந்தால், டிஜிட்டல் கட்டண முறையான Phonepay மூலமாக எளிதில் வருமான வரி செலுத்தி கொள்ளலாம். இதற்காகவே, புதிய PhonePe ஆப் வசதியும் நடைமுறையில் உள்ளது.

வருமான வரி இலக்கு: அதேபோல, வரிக்கு உட்பட்ட வருமானம் விலக்குகள் மற்றும் விலக்குகள் மூலம் குறைக்கப்பட்டது.. இவ்வளவு வசதிகளை செய்து தந்தாலும்கூட, பலர் வரிக்கணக்கை தாக்கல் செய்வதில்லை. வரிஏய்ப்பு தொடர்ந்து நடப்பதால்தான், வருமான வரித்துறை பல்வேறு அதிரடிகளை கையில் எடுத்து வருகிறது.
வருமான வரி ஏய்ப்பு செய்யும் மாத சம்பளம் பெறுபவர்களை கண்டறிவதற்காகவே, புதிய சாப்ட்வேர் ஒன்றை சமீபத்தில் கொண்டுவந்தது.. இந்த சாப்ட்வேரை பயன்படுத்தி, யாரெல்லாம் வரிஏய்ப்பு செய்கிறார்களோ, அவர்களை எளிதாக கண்டறிந்து, அவர்கள்மீது 200 சதவீதம் வரை அபராதம் விதிக்கவும் முடிவு செய்தது.

நடைமுறை: இப்போதுகூ, ஒரு புதிய முடிவை வருமான வரித்துறை கையில் எடுத்துள்ளது. வருமான வரியை சரிபார்த்து கொள்ளுமாறு, அறிவுறுத்தியிருக்கிறது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் உள்ளதாவது:

"வருமான வரி செலுத்துவோர் மற்றும் அவர்களின் கணக்கு விபரங்கள், இ - வெரிபிகேஷன் என்ற, ஆன்லைன் சரிபார்ப்புக்கு உட்படுத்தும் நடைமுறை, 2021ல் அறிமுகமானது.

வருமான வரித்துறையின், https://incometaxindia.gov..in/ என்ற இணையதளத்தில், வரி செலுத்துவோருக்கான இணைய பக்கத்தில், ஆண்டு கணக்கு விபரங்களுடன், நிதி நிதி பரிவர்த்தனைகள் இடம் பெற்றுள்ளன. தாங்கள் தாக்கல் செய்த கணக்கு விபரங்கள் மற்றும் வங்கி நிதி பரிவர்த்தனைகளை சரிபார்த்து கொள்ளவும். வரி கணக்கு அறிக்கைக்கும், நிதி பரிவர்த்தனைக்கும் இடையே முரண்பாடு இருந்தால், மேம்படுத்தப்பட்ட அறிக்கையை தாக்கல் செய்யலாம்.

ஆவணங்கள்: சரியாக இருந்தால், 'சம்மதம்' என ஆன்லைன் பதிவை மேற்கொள்ளவும். இதில் முரண்பாடுகள் இருந்தால், வரி செலுத்துபவரின் ஆவணங்கள், "சோர்ஸ்" என்ற மூல ஆதாரங்களுடன் ஒப்பிடப்பட்டு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்" என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+