Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வருமான வரி.. மாத சம்பளக்காரர்களையும் வருமான வரியை கட்ட சொன்னது "இதுக்குத்தான்".. மத்திய அரசு அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த 2021-22-ம் நிதியாண்டுக்கான வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், கடந்த வருடம் ஜூலை 31ம் தேதியுடன் முடிவுக்கு வந்த நிலையில், வருமானவரித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

வருமான வரி விதிகளின்படி, வரிக்கு உட்பட்டவர்கள் வருடந்தோறும் வருமான வரி மற்றும் அதன் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பது அடிப்படை விதியாகும்.
வரிஏய்ப்பு: ஆனால், சிலர் வரி ஏய்ப்பு செய்துவிடுகிறார்கள்.. அதனால்தான், வருமான வரி ஏய்ப்பு பற்றி தகவல் அளிப்போருக்கு பரிசு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது..

Income Tax Department and Maharashtra is the first state in paying High tax to Central Government

அதன்படி, கணக்கில் காட்டப்படாத வருமானம், சொத்துகள் மற்றும் வரி ஏய்ப்பு விவரங்கள் பற்றி தகவல் அளிப்போருக்கு பரிசும் வழங்கப்படுகிறது. அதாவது, பினாமி சொத்துகள் பற்றி தகவல் அளிப்போருக்கு ரூ.1 கோடி வரை பரிசு வழங்கப்படுகிறது.

ஒருவர் சட்டவிரோதமான முறையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து, அவர் வரி ஏய்ப்பில் ஈடுபட நேர்ந்தால் அது குறித்து தகவல் அறிந்தவர்கள் வருமானவரித் துறையிடம் தாராளமாக தகவல் தெரிவிக்கலாம்.

வருமானவரி: எனினும், வரிஏய்ப்பு நடந்து கொண்டுதானிருக்கிறது.. குறிப்பாக, மாத சம்பளம் பெறுபவர்கள் பலரும், வீட்டு வாடகைக்கு போலி ரசீதுகளை சமர்பித்து, வருமான வரி விலக்கு பெறுவது பரவலாக நடக்கிறது. அதனால்தான், மத்திய அரசு இதற்கும் ஒரு கடிவாளத்தை போட்டுள்ளது.. அதன்படி, வருமான வரி ஏய்ப்பு செய்யும் மாத சம்பளம் பெறுபவர்களை கண்டறிய, வருமான வரித் துறை புதிய சாப்ட்வேரை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது..

இந்த சாப்ட்வேரை பயன்படுத்தி, யாரெல்லாம் வரிஏய்ப்பு செய்கிறார்களோ, அவர்கள் மீது 200 சதவீதம் வரை அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது.. சம்பந்தப்பட்டவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்படுவததாக கூறப்படுகிறது.

இப்படியெல்லாம் கெடுபிடிகள் மேற்கொள்வதால்தான், ஆண்டுவருமானமும் உயர்ந்து வருகிறது.. இந்தியாவில் 1 கோடிக்கு மேல் ஆண்டு வருமானம் பெறுவோரின் எண்ணிக்கை இந்த வருடமும் இரட்டிப்பாகியுள்ளதாக வருமானவரித்துறை அறிவித்துள்ளது.

டபுள் மடங்கு: 2021-22 ஜூலை 31ம் தேதியுடன் வருமான வரி தாக்கல் முடிவடைந்த நிலையில், ஒவ்வொரு வருடமும் ஒரு கோடிக்கு மேல் ஆண்டு வருமானம் பெறுபவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காகி வருவதாக வருமானத்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டிருக்கிறது. அதாவது, இந்தியா முழுவதும் ஒரு கோடிக்கு மேல் ஆண்டு வருமானம் பெறுவதாக 1,69,000 பேர் வருமான வரி தாக்கல் செய்திருக்கின்றனர்.

கடந்த வருடத்தில், 81 ஆயிரத்து 653 பேர் ஒரு கோடிக்கு மேல் ஆண்டு வருமானம் பெற்று வந்த நிலையில் இந்த ஆண்டு இரட்டிப்பாக்கப்பாகியுள்ளது. இதனால், இந்தியா முழுவதும் வருமான வரி தாக்கலின் எண்ணிக்கை ஏழு கோடியே 78 லட்சமாக அதிகரித்துள்ளது. இதேபோல, தனிநபர்கள், நிறுவனங்கள், அறக்கட்டளைகள் ஆகியவற்றுடன் சேர்த்து ஒரு கோடிக்கும் மேல் வருமானம் பெற்றதாக 2,69,000 கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

6வது இடம்: அதுமட்டுமல்ல, இந்தியாவிலேயே, மகாராஷ்டிரா மாநிலத்தில் தான், ஒரு கோடியே 98 லட்சம் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. உத்தரப்பிரதேசத்தில் 75,72,000 ஆயிரம் கணக்குகளும், குஜராத்தில் 75,62,000 ஆயிரம் கணக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன. நம்முடைய தமிழ்நாடு 6வது இடத்தை பிடித்துள்ளது.. 47,91,000 ஆயிரம் கணக்குகளுடன் 6-வது இடத்தில் தமிழகம் உள்ளது.

ஒட்டுமொத்த வருமானவரி கணக்கு தாக்கலின் எண்ணிக்கை, கடந்த 2021-22-ம் நிதியாண்டில் 7 கோடியே 78 லட்சமாக அதிகரித்துள்ளதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+