சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆபரேஷன் ஆன்டி - ப்ளூ ஸ்கை.. அதிரடியாக புகுந்த அதிகாரிகள்.. என்ன நடக்கிறது கதிர் ஆனந்த் கல்லூரியில்?

Google Oneindia Tamil News

Recommended Video

    தொடரும் ஆபரேஷன் ஆன்டி - ப்ளூ ஸ்கை.. கலக்கத்தில் திமுக- வீடியோ

    சென்னை: ஆபரேஷன் ஆன்டி - ப்ளூ ஸ்கை மூலம் தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் நிறைய ரெய்டுகள் நடக்க இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

    திமுக தரப்பு மொத்தமாக கிடுகிடுத்து போய் இருக்கிறது என்றுதான் கூற வேண்டும். தேர்தல் பணிகளை கவனித்துக் கொண்டு இருந்த திமுகவினருக்கு ஐடி ரெய்டு அச்சுறுத்தல் உருவாகி உள்ளது.

    திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் கல்லூரியில் இன்று மீண்டும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். இது வேலூரில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நேற்று முதல்நாள் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    Durai Murugan: தொடர் வருமான வரி சோதனைகள்.. ஹைகோர்ட் கதவை தட்டும் துரைமுருகன், கதிர் ஆனந்த் Durai Murugan: தொடர் வருமான வரி சோதனைகள்.. ஹைகோர்ட் கதவை தட்டும் துரைமுருகன், கதிர் ஆனந்த்

    எதுவும் கிடைக்கவில்லை

    எதுவும் கிடைக்கவில்லை

    ஆனால் முதல்நாள் சோதனையில் பெரிதாக அதிகாரிகள் எதிர்பார்த்த பணம் எதுவும் கிடைக்கவில்லை. 10 லட்சம் ரூபாய் மட்டுமே கிடைத்ததாக செய்திகள் வந்தது. ஆனால் அதையும் கூட துரைமுருகன் தரப்பு மறுத்து, எங்களிடம் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று கூறியது. ஆனால் அப்போதே தொடர்ந்து ரெய்டுகள் நடக்கும் என்பதற்கான அறிகுறிகள் தென்பட்டது.

    பணம் சிக்கியது

    பணம் சிக்கியது

    இந்த நிலையில்தான் இன்று அதிகாலை வேலூர் அருகே காட்பாடியில் உள்ள சிமெண்ட் குடோனில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். ரகசிய ரிப்போர்ட் மூலம் இந்த அதிரடி சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் 9 கோடி ரூபாய் வரை கைப்பற்றப்பட்டு இருக்கிறது.

    இந்தியாவின் மாபெரும் தேர்தல் திருவிழா.. பங்கேற்க மறவாதீர்கள்

    யார் பணம்

    யார் பணம்

    இந்த சிமெண்ட் குடோன் பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு நெருக்கமான நண்பர் ஆவார். இந்த குடோனில் இருந்தது எல்லாம் புதிய 200 ரூபாய் நோட்டுகள். இதில் வேலூர் வார்டு விவரங்கள் குறித்து எழுதிய சீட் ஒன்றும் சிக்கி உள்ளது. அதேபோல் வேலூர் வாக்காளர்களின் எண்ணிக்கை குறித்த புள்ளி விவர டைரியும் சிக்கி உள்ளது.

    சோதனை செய்தனர்

    சோதனை செய்தனர்

    இந்த பணம் கைப்பற்றப்பட்ட சில நிமிடங்களில் பாதி அதிகாரிகள், வேகமாக கதிர் ஆனந்தின் கிங்ஸ்டன் கல்லூரிக்கு படை எடுத்தனர். இது தொடர்பாக வேறு ஏதேனும் ஆதாரங்கள் கிங்ஸ்டன் கல்லூரியில் கிடைக்கிறதா என்று சோதனை செய்ய சென்றனர். இந்த சோதனைதான் தற்போது கிங்ஸ்டன் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.

    என்ன ஆபரேஷன்

    என்ன ஆபரேஷன்

    திமுக கட்சி 'ப்ளூ ஸ்கை ஆப்ரேஷன்' மூலம் லோக்சபா தேர்தலில் வெற்றிபெற திட்டமிட்டு இருப்பதாக அதிமுக குற்றஞ்சாட்டி இருந்தது. இந்த ஆபரேஷன் மூலம் பல கோடிகளை அள்ளிக்கொடுத்து மக்களை தேர்தல் நேரத்தில் விலைக்கு வாங்க திமுக முயற்சிக்கிறது என்று அதிமுக தரப்பு குற்றஞ்சாட்டியது.

    இதுதான் பெயர்

    இதுதான் பெயர்

    இந்த நிலையில் தற்போது இந்த சோதனைக்கு அதிகாரிகள் ''ஆபரேஷன் ஆன்டி - ப்ளூ ஸ்கை'' என்று பெயர் வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. திமுகவின் ப்ளூ ஸ்கை ஆபரேஷனுக்கு எதிராக இதை அதிகாரிகள் கையில் எடுத்து இருக்கிறார்கள். இந்த ரெய்டு துரைமுருகனோடு முடியாது, இன்னும் பல இடங்களில் ரெய்டு நடக்க வாய்ப்புள்ளது என்றும் தகவல்கள் வருகிறது.

    English summary
    Income Tax department creates Operation Anti Blue Sky squad to raid on Duraimurugan premises.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X