வருமான வரி.. மாத சம்பளக்காரரையும் வரிகட்ட சொல்றது "இதுக்குத்தான்".. இப்ப பாருங்க, மத்திய அரசு சரவெடி
சென்னை: வருமான வரியை கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அவ்வப்போது அறிவுறுத்தி வரும் நிலையில், அடுத்த அதிரடியை தற்போது கையில் எடுத்துள்ளது.
வருமான வரி விதிகளின்படி, வரிக்கு உட்பட்டவர்கள் வருடந்தோறும் வருமான வரி மற்றும் அதன் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பது அடிப்படை விதியாகும்.

வருமான வரி: இதற்கு பின்பற்ற வேண்டிய தேவையான நடைமுறைகளை வருமான வரித்துறை நிர்ணயம் செய்துள்ளது.. குறிப்பாக வரிக்கு உட்பட்ட வருமானம் விலக்குகள் மற்றும் விலக்குகள் மூலம் குறைக்கப்படும்போது பலர் வரிக்கணக்கை தாக்கல் செய்வதில்லை.
வருமானவரியை தவறாமல் அனைவரும் செலுத்திவிட வேண்டும் என்று தொடர்ந்து அரசு வலியுறுத்தியும்கூட, வரிஏய்ப்பு நடந்து கொண்டுதானிருக்கிறது.. குறிப்பாக, மாத சம்பளம் பெறுபவர்கள் பலரும், வீட்டு வாடகைக்கு போலி ரசீதுகளை சமர்பித்து, வருமான வரி விலக்கு பெறுவது பரவலாக நடக்கிறது.
வரி ஏய்ப்பு: அதனால்தான், மத்திய அரசு இதற்கும் ஒரு கடிவாளத்தை போட்டுள்ளது.. அதன்படி, வருமான வரி ஏய்ப்பு செய்யும் மாத சம்பளம் பெறுபவர்களை கண்டறிய, வருமான வரித்துறை புதிய சாப்ட்வேரை சமீபத்தில் அறிமுகப்படுத்தியிருந்தது.. இந்த சாப்ட்வேரை பயன்படுத்தி, யாரெல்லாம் வரிஏய்ப்பு செய்கிறார்களோ, அவர்கள் மீது 200 சதவீதம் வரை அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது.. சம்பந்தப்பட்டவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்படுவதாக செய்திகளும் வெளியாகியிருந்தது.
பிறகு, அடுத்த சில நாட்களிலேயே கணக்கில் காட்டப்படாத ரூ.5,200 கோடி வருமானத்தை அதிகாரிகள் கண்டறிந்தனர்.. இதோ இப்போது, வருமான வரி கணக்கு தாக்கலில் முரண்பாடு உள்ளவர்களுக்கு வருமான வரித்துறை, நோட்டீஸ் அனுப்பி வருகிறது..
நோட்டீஸ்கள்: இதுவரை சுமார் 22,000 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஜூலை 31ம் தேதியுடன், சுமார் 6.77 கோடிக்கும் அதிகமானோர் வருமான வரி தாக்கல் செய்துள்ளார்களாம்..
இப்போது, வருமான வரித்துறையில் மக்களின் வருமானதோடு ஒப்பிட்டு அதிகப்படியான தொகை செலுத்தி அவர்களுக்கு தொகையை திருப்பி அளித்து வருகிறது... இதைத்தவிர, வரி கணக்கில் முரண்பாடு உள்ளவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டும் வருகிறது.
அதாவது வருமான வரி தாக்கல் செய்பவரின் நிதி பதிவு மற்றும் பரிவர்த்தனை பதிவுகள் இவை இரண்டுமே ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.. ஒருவேளை, அதில் முரண்பாடுகள் இருக்கும்பட்சத்தில், சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். இதுவரை கிட்டத்தட்ட 22,000 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.. இது குறித்து வருமான வரி செலுத்துபவர், துறைக்கு உரிய பதிலை அளிக்க வேண்டியிருக்குமாம்.












Click it and Unblock the Notifications