வருமான வரி தாக்கல் கட்டுபவர்களுக்கு.. அசத்தலான குட் நியூஸ்.. மீண்டும் நீட்டிக்கப்படும் கடைசி தேதி?
சென்னை: மதிப்பீட்டு ஆண்டு 2026-27 (நிதியாண்டு 2024-25) வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு முடிவடைய இன்னும் 17 நாட்களே உள்ள நிலையில், இதற்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என பட்டய கணக்காளர்கள், வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சண்டிகர் பட்டய வரிச்சங்கமான CCATAX, FY2024-25க்கான வருமான வரி தாக்கல் மற்றும் வரி தணிக்கைக்கு கூடுதல் அவகாசம் வழங்குமாறு வரித்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த ஆண்டு மே மாதம், மத்திய அரசு வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை 2025 ஜூலை 31-லிருந்து செப்டம்பர் 15-ஆம் தேதிக்கு நீட்டித்தது.

காலக்கெடு நீட்டிப்பு
இந்த காலக்கெடு நீட்டிப்பு தனிநபர்கள், இந்து கூட்டுக் குடும்பங்கள் (HUFs) மற்றும் கணக்குகள் தணிக்கை செய்யத் தேவையில்லாதவர்களுக்கு மட்டுமே என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இப்போது, தொழில்நுட்ப சிக்கல்கள், AIS மற்றும் படிவம் 26AS இடையேயான தரவு முரண்பாடுகள், சேவையக செயலிழப்பு மற்றும் டைம் அவுட் போன்ற காரணங்களைச் சுட்டிக்காட்டி, CCATAX அமைப்பு மீண்டும் காலக்கெடு நீட்டிப்பைக் கோரியுள்ளது.
மே மாதம் வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஏன் நீட்டிக்கப்பட்டது?
கடந்த மே மாதம் வருமான வரி படிவங்கள் தாமதமாக வெளியிடப்பட்டது, போர்ட்டலில் பயன்பாடுகள் தாமதமாக கிடைத்தது, TDS சரிபார்ப்பு மற்றும் படிவம் 26AS/TIS முரண்பாடுகள் தொடர்பான சிக்கல்கள் உள்ளிட்ட பல நடைமுறைச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) காலக்கெடுவை நீட்டித்ததாகத் தெரிவித்தது.
மதிப்பீட்டு ஆண்டு 2025-26-இல் இதுவரை எத்தனை வருமான வரி தாக்கல் செய்யப்பட்டுள்ளன?
வருமான வரித்துறை இணையதளத்தில் ஆகஸ்ட் 28, 2025 அன்று புதுப்பிக்கப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி, 3.90 கோடிக்கும் அதிகமான வருமான வரி தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேலும், 3.72 கோடிக்கும் அதிகமான வரி தாக்கல் சரிபார்க்கப்பட்டுள்ளன.
மொத்தம் சுமார் 2.47 கோடி வரி தாக்கல் செய்யப்பட்டு முடிந்துள்ளன. எனினும், கடந்த மதிப்பீட்டு ஆண்டு தரவுகளின்படி, FY 2025-26-இல் 5 கோடிக்கும் அதிகமான வரி செலுத்துவோர் தங்கள் வருமான வரி தாக்கல் செய்யப்பட வேண்டும். நிதியாண்டு 2024-25-க்கு 9.1 கோடிக்கும் அதிகமான வருமான வரி தாக்கல் செய்யப்பட்டன.
கடந்த நிதியாண்டின் வரி தாக்கல் எண்ணிக்கையை கருத்தில் கொண்டால், 50% இலக்கு கூட அடையப்படவில்லை. இந்த ஆண்டு தாக்கல் செய்வதில் குறிப்பிடத்தக்க தாமதம் ஏற்பட்டுள்ளது. வருமான வரி படிவங்கள் மற்றும் தொடர்புடைய பயன்பாடுகள் மத்திய நேரடி வரிகள் வாரியத்தால் (CBDT) தாமதமாக வெளியிடப்பட்டதால், வரி தாக்கல் செய்யும் காலம் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் தாமதமாகத் தொடங்கியது.
தற்போது காலக்கெடு நெருங்கி வருவதால், வரி செலுத்துவோர் பல தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்வதாகக் கூறப்படுகிறது. வருமான வரி போர்ட்டலில் தொடர்ந்து ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகள், புதிய வருமான வரி படிவங்களின் அதிகரித்த சிக்கல்தன்மை, சம்பளம் மற்றும் TDS தொடர்பான ஆவணங்கள் தாமதமாவது ஆகிய காரணங்கள் இந்த நீட்டிப்பை செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன.
வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி மீண்டும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது செப்டம்பர் 15 ஆம் தேதி கடைசி நாளாக உள்ள நிலையில், மேலும் பல லட்சம் பேரின் வருமான வரி இன்னும் ஆய்வு செய்யப்படாமல் உள்ளதால் இந்த நீட்டிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பளம் பெறுவோர் மற்றும் வணிக உரிமையாளர்கள் உட்பட பலர் தற்போது வருமான வரி அறிக்கைகளை தாக்கல் செய்வதில் முனைப்புடன் ஈடுபட்டுள்ளனர். இந்த சூழலில், வருமான வரித் துறை தரவு பகுப்பாய்வு மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வரி விலக்குகளை தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.
வருமான வரி தாக்கல்
மோசடியான வரி விலக்குகளைக் கண்டறிய நாடு முழுவதும் சரிபார்ப்பு நடவடிக்கையை வருமான வரித் துறை தொடங்கியுள்ளது. மருத்துவக் காப்பீடு, வீட்டு வாடகைப்படி (HRA), கல்வி, வீட்டுக் கடன் வட்டி, வாகனக் கடன்களுக்கான விலக்குகள், அரசியல் கட்சிகள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கான நன்கொடைகள் ஆகியவை இந்த ஆய்வில் அடங்கும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) தெரிவித்துள்ளது.
வருமான வரித் துறை AI மற்றும் தரவு பகுப்பாய்வுக் கருவிகளின் உதவியுடன் வரி சலுகைக் கோரிக்கைகளை கவனமாக ஆராய்ந்து வருகிறது. தவறாக தாக்கல் செய்யப்பட்ட வரி அறிக்கைகளை அடையாளம் காண நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
ITR returns: வருமான வரி தாக்கல்
இந்த AI அமைப்பு, டிடிஎஸ் தரவு, வங்கிப் பதிவுகள் மற்றும் பிற ஆதாரங்களை ஆய்வு செய்கிறது. வருமான வரி அறிக்கைகள் (ITR), வருடாந்திர தகவல் அறிக்கை (AIS) மற்றும் படிவம் 26AS ஆகியவற்றுக்கு இடையேயான முரண்பாடுகளை உடனடியாகக் கண்டறிந்து, தவறுகள் அல்லது மோசடி முயற்சிகளைச் சுட்டிக்காட்டுகிறது.
தவறான கோரிக்கைகள் மீது கடுமையான அபராதம் விதிக்கப்படும். செலுத்த வேண்டிய வரிக்கு 24% வட்டி மற்றும் 200% வரை அபராதம் விதிக்கப்படலாம். வரி ஏய்ப்பு போன்ற கடுமையான குற்றங்களுக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம்.












Click it and Unblock the Notifications