சென்னையில் களமிறங்கிய ஐடி அதிகாரிகள்.. போரூர் ஐடி நிறுவனத்தில் வருமான வரித்துறை ரெய்டு
சென்னை: சென்னையில் இரண்டு இடங்களில் வருமான வரித்துறை அதிகார்கள் சோதனை நடத்தி வருகிறார்கள். போருரில் உள்ள கெப்பல் நிறுவனத்தில் நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். காலை 7 மணி முதலே அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளார்கள். கடந்த ஆகஸ்டு மாதம் ஒன் பாராமவுண்ட் ஐடி வளாகத்தை ரூ2,100 கோடிக்கு வாங்கிய நிலையில் கெப்பல் நிறுவனத்தில் ஆய்வு செய்து வருகிறார்கள்.
சென்னை போரூர் மற்றும் கங்குவான்சாவடி பகுதிகளில் இன்று காலையில் இருந்தே வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். காலை 7 மணி முதல் இந்த பகுதிகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னை போரூர் அருகே உள்ள கெப்பல் என்ற தனியார் ஐடி நிறுவனத்தில் இந்த சோதனை நடத்தி வருகிறார்கள்.

கடந்த ஆகஸ்டு மாதம் தான் இந்த கெப்பல் நிறுவனம் இங்கு திறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிங்கப்பூரை சேர்ந்த இந்த நிறுவனமானது உலகம் முழுக்க 30 க்கும் மேற்பட்ட இடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் சென்னை நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் உள்ள 7க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையினை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதனால் அலுவலகம் முன்பு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இதேபோல் சென்னை கங்குவான்சாவடியில் உள்ள ஐடி நிறுவனத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். எதற்காக இந்த சோதனை என்பதும், ஏதும் ஆவணங்கள் சிக்கியதா என்பதும் சோதனைக்கு பிறகே தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications