அக்கவுண்ட்டில் ரூ.6000.. சென்னையில் ரேஷன் கார்டு இல்லாதோருக்கும் பணம்? தமிழக அரசு குட்நியூஸ் வருதா?
சென்னை: தமிழக அரசு வெள்ள நிவாரணம் 6000 ரூபாய் அறிவித்து 40 நாட்கள் ஆன நிலையில், இன்னும் நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை என்று மக்கள் கோரிக்கை விடுக்க துவங்கி உள்ளனர்.
கடந்த டிசம்பர் 3, 4ம் ஆகிய தேதிகளில் வீசிய மிகஜாம் புயல், சென்னையையே புரட்டு போட்டுவிட்டது.. சென்னை மட்டுமல்லாமல், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் புயல் காரணமாக கனமழை வெளுத்தது.. இதனால், இந்த 4 மாவட்ட மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.. வீடுகளில் வெள்ளநீர் சூழந்து, வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகையாக ரூ.6000 வழங்கப்படும் என்று அதிரடியாக அறிவித்தார்..
வரி செலுத்துவோர்: அந்த அறிவிப்பில், மழை வெள்ளத்தால் மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன உயர் அலுவலர்கள் மற்றும் வருமான வரி செலுத்துவோர், சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைதாரர்கள் தங்கள்து வாழ்வாதாரம் பாதிப்பு, துணி, பாத்திரங்கள், வீட்டு உபயோக பொருட்கள் இழப்பு ஏற்பட்டிருந்தாலும், பாதிப்பு விவரங்களை தங்களது வங்கி கணக்கு விவரத்துடன், தங்களது நியாயவிலை கடைகளில் விண்ணப்பிக்கலாம்.
அந்த விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, அதனடிப்படையில் அவர்களுக்கு உரிய நிவாரணம் அவர்களின் வங்கி கணக்கில் அனுப்பி வைக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டது.
வெள்ள நிவாரணம்: அதன்படி வெள்ள நிவாரணம் 6000 ரூபாய் ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், கிட்டத்தட்ட 5.5 லட்சம் பேர் 6000 நிவாரணம் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். ஆனால், விண்ணப்பித்து 40 நாட்கள் ஆகியும் இதுவரை நிவாரணம் வங்கி கணக்கிற்கு வரவில்லை என்கிறார்கள்..
பலருக்கு சொந்த ஊர்களில் ரேஷன் கார்டுகள் இருந்தாலும் நிவாரணம் கிடைக்கவில்லையாம்.. பாதிப்பு குறித்து கணக்கெடுக்க மாநகராட்சி தரப்பில் யாரும் வரவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் கிளம்பி உள்ளன.. மேலும், விண்ணப்ப படிவங்களை அளித்தவர்களில் சிலரை, குத்துமதிப்பாக தேர்வு செய்து அவர்களது செல்போன் நம்பருக்கு மாநகராட்சி தரப்பில் தொடர்பு கொண்டு பேசியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
பண்டிகை: பொங்கலுக்கு முன்பாகவே இந்த 6000 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், அதுகுறித்த தகவல் எதுவுமே வரவில்லை.. தற்போது பொங்கல் பண்டிகையும் முடிந்து விட்டது. அறிவித்து 40 நாட்கள் ஆகியும் இன்னும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்காததால், விரைந்து 6000 ரூபாய் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications