காலையில் சென்னையில் 20 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு..எந்தவித பாதுகாப்பும் இல்லாமல்?
சென்னை: சென்னையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. இந்த ரெய்டானது காலையிலிருந்தே பரபரப்பை தலைநகரில் உண்டுபண்ணி வருகிறது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்த நிலையில், அது தொடர்பான ரெய்டுகளும் தமிழகத்தில் அடிக்கடி நடத்தப்பட்டு வருகின்றன..

இதனிடையே, கடந்த வாரம் சென்னையில் திடீரென அதிகாரிகளின் சோதனை நடந்தது.. 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர்..
குறிப்பாக. வடபழனி, ஆழ்வார்பேட்டை, ராயப்பேட்டை, நங்கநல்லூர் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர். ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்புடன் சோதனை நடந்தது..
தியாகராய நகரில் உள்ள கெமிக்கல் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கெமிக்கல் நிறுவனங்கள் நடத்தும் தொழிலதிபர்கள் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் பேரில் சோதனை நடத்தியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேபோல 2 நாட்களுக்கு முன்புகூட சென்னையில் தொழிலதிபர் வீடு உள்பட 5 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியிருந்தனர்..
சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.. வேளச்சேரியில் தொழிலதிபர் பிஷ்னோய் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெயிடு நடத்தியிருந்தனர்.. அதேபோல அடையாறில் உள்ள டாக்டர் இந்திரா என்பவர் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.. மேற்கு மாம்பலம் உள்பட மேலும் 2 பகுதிகளில் துணை ராணுவத்தினரின் பாதுகாப்போடு இந்த சோதனையானது நடத்தப்பட்டது..
இந்நிலையில், இன்றைய தினமும் 40க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வழக்கமாக போலீஸ் அல்லது துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் வருமான வரி சோதனை நடத்தப்படும். ஆனால், தற்போது வழக்கத்துக்கு மாறாக தற்போது எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் இந்த திடீர் சோதனை நடைபெற்று வருகிறது. இது மீண்டும் சென்னைவாசிகளின் பரபரப்பை எகிற வைத்து வருகிறது.












Click it and Unblock the Notifications