செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் வீடு உள்பட தமிழகத்தில் 40 இடங்களில் 2வது நாளாக ஐடி சோதனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் 40 இடங்களில் நேற்று நடத்தப்பட்ட வருமான வரித் துறை சோதனையானது இன்று 2ஆவது நாளாக தொடர்ந்து நடைபெறுகிறது.

செங்கல்பட்டு, படூர், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வருமான வரித் துறை சோதனை நேற்று நடத்தப்பட்டு வந்தது. செங்கல்பட்டு மாவட்டம் படூர், சென்னை துரைப்பாக்கத்தில் தனியார் நிறுவனம் என சோதனை நடத்தப்பட்டது.

Income tax officials raid for 2nd day in 40 places of Tamilnadu

சென்னை மற்றும் புறநகரில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடத்தியது. 30க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வந்தனர். வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக வருமான வரித் துறையினர் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

சென்னை எம்ஜிஆர் நகர் சப்தகிரி காலனியில் உள்ள தனியார் நிறுவனம், சென்னை திநகர் பார்த்தசாரதிபுரம் பகுதியில் உள்ள பந்தாரி நிறுவனம் போன்றவற்றில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதேபோல துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, நீலாங்கரை, நாவலூர், ஓ.எம்.ஆர்., எண்ணூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் காசி என்பவருக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித் துறை சோதனை நடந்தது.

இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சுமார் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடத்தப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+