வருமான வரித் தாக்கல் செய்பவர்களுக்கு கையில காசு நிக்கணுமா? வரி தள்ளுபடி பெற இதோ சூப்பர் டிப்ஸ்
சென்னை: ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் வந்துவிட்டாலே சம்பளம் வாங்குபவர்கள் முதல் தொழில் செய்பவர்கள் வரை அனைவருக்கும் ஒருவித பதற்றம் தொற்றிக்கொள்வது வழக்கம்.. இதற்கு முக்கியக் காரணம் வருமான வரித் தாக்கல் மற்றும் வரிச் சேமிப்புக்கான காலக்கெடு முடிவடையப் போவதுதான்.. அதைப் பற்றிதான் இங்கே சுருக்கமாக பார்க்கப் போகிறோம்..
2024-25 நிதியாண்டு (அதாவது 2025 மார்ச் 31 வரை) முடிய இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், மத்திய வருமான வரித் துறை பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.. குறிப்பாக, இந்த ஆண்டு வரித் தாக்கல் செய்வதற்கான புதிய ITR படிவங்கள் (ITR-1, ITR-2 உள்ளிட்டவை) முன்கூட்டியே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.. இதில் நாம் செய்யும் ஒவ்வொரு முதலீடும், சேமிப்பும் மிகவும் துல்லியமாகக் கணக்கிடப்பட வேண்டும் என்பதால் மக்கள் இப்போதே அலர்ட்டாக இருக்க வேண்டியது அவசியம்..

எல்ஐசி - வரிச்சலுகை
நீங்கள் பழைய வரி முறையை பின்பற்றுபவர் என்றால், மார்ச் 31ம் தேதிக்குள் உங்களது வரிச் சேமிப்பு முதலீடுகளை செய்து முடிக்க வேண்டும்.. எல்ஐசி, பொது வருங்கால வைப்பு நிதி அல்லது 5 ஆண்டு கால வங்கி வைப்பு நிதி போன்ற திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் வரியை குறைக்க முடியும்..
ஆனால் பலரும் கடைசி நிமிடம் வரை காத்திருந்து மார்ச் மாதத்தின் கடைசி வாரத்தில் அவசர அவசரமாக முதலீடு செய்கிறார்கள்.. இதனால் சில நேரங்களில் வங்கி பரிவர்த்தனைகள் தோல்வியடைந்து, வரிச் சலுகையை பெற முடியாமல் போகும் வாய்ப்பு உள்ளது.. எனவே பிப்ரவரி மாத இறுதியிலேயே இதற்கான திட்டமிடலை தொடங்குவது புத்திசாலித்தனம்..
வருமான வரித்துறை
அதேபோல், இந்த ஆண்டு வருமான வரித் துறை வெளியிட்டுள்ள புதிய படிவங்களில் சில கூடுதல் விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன.. குறிப்பாக பங்குச் சந்தை முதலீடுகள், கிரிப்டோ கரன்சி மூலம் கிடைத்த லாபம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்கள் குறித்த விவரங்களை மிகத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது..
தவறான தகவல்களை அளித்தால் அல்லது வருமானத்தை மறைத்தால் வருமான வரித் துறையிடமிருந்து நோட்டீஸ் வரக்கூடும்.. இப்போது எல்லாமே டிஜிட்டல் மயமாகிவிட்டதால், உங்கள் Permanent Account Number (PAN) கார்டு மற்றும் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட அனைத்துப் பரிவர்த்தனைகளும் அதிகாரிகளின் கண்காணிப்பில் இருக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது..
வணிகர்கள் - ஜிஎஸ்டி வரி
சிறு குறு தொழில் செய்பவர்கள் மற்றும் வணிகர்களுக்கு மார்ச் மாதம் என்பது கணக்கு வழக்குகளை சரிபார்க்கும் காலமாகும்.. ஜிஎஸ்டி ரீஃபண்ட் மற்றும் வரி வரவுகளை சரியாக பெறுவதற்கு மார்ச் 31க்குள் நிலுவையில் உள்ள அனைத்து வேலைகளையும் முடிப்பது நல்லது..
பாமர மக்கள் பலரும் வரி என்பது பெரிய விஷயம் என்று நினைத்து தள்ளிப் போடுகிறார்கள்.. ஆனால் சரியான நேரத்தில் வரி ஆலோசகரையோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ தகவல்களைச் சேகரித்தால் தேவையற்ற அபராதங்களை தவிர்க்கலாம்.. அதுமட்டுமல்ல, கடின உழைப்பில் கிடைத்த பணத்தை வரியாகவோ அல்லது அபராதமாகவோ இழக்காமல் இருக்க, இந்த மார்ச் மாதக் கெடுவை ஒரு எச்சரிக்கையாக கருதி நாம் செயல்பட வேண்டியுள்ளது..!!!
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications