சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உஷார்.. வருமான வரி கணக்கு தாக்கல்.. 31-ந்தேதி கடைசி நாள்.. தவறினால் ரூ.1,000 அபராதம்.. புது வார்னிங்

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதவர்களுக்கு 31-ந் தேதிக்கு பிறகு ரூ.1,000 அபராதம்

Google Oneindia Tamil News

சென்னை: வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய கடைசி தேதி வருகிற 31-ந்தேதியுடன் முடிகிறது.. அதற்கு பிறகு வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய, வருடத்துக்கு ரூ.5 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோர், ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும்.

வருமானவரி தாக்கல் செய்வது அடிப்படையான கடமையாகும்.. வருடத்திற்கு ரூ.2.5 லட்சம் உச்சவரம்பை தாண்டும் எல்லாருமே வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பது விதிமுறை..

வரி ஆதாய நடவடிக்கையில் ஈடுபட்டு, உச்சவரம்புக்கு கீழ் வந்தாலும், வருமானவரி கணக்கு தாக்கல் செய்வது அவசியமாகும்..

தமிழகத்தில் 3 லட்சம் வணிகர்கள் வரி செலுத்தவில்லை! வட மாநில வணிகர்கள் முறைகேடு -அமைச்சர் மூர்த்தி தமிழகத்தில் 3 லட்சம் வணிகர்கள் வரி செலுத்தவில்லை! வட மாநில வணிகர்கள் முறைகேடு -அமைச்சர் மூர்த்தி

கட்டணம்

கட்டணம்

ஒருவர் முன்னதாகவே வருமான வரி தாக்கல் செய்துவிட்டால், அதற்கு நிறைய சலுகைகளையும் அரசு வழங்கி வருகிறது. குறிப்பாக, வருமான வரி சட்டம் 234 ஏ,பி மற்றும் சி பிரிவின் கீழ், வட்டி விகிதம் மற்றும் 234 எஃப் பிரிவின் கீழ் தாமதமாக தாக்கல் செய்ததற்கான கட்டணத்தை தவிர்க்க இயலும். ஆனால், சில காரணங்களால், குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள், வரி தாக்கல் செய்ய முடியாதபோது, சில சிக்கல்களும் வரக்கூடும்.. மாதத்திற்கு 1 சதவீதம் கூடுதல் வட்டி, அதற்குரிய வரியுடன் செலுத்த வேண்டும்.. தாமத கட்டணத்தையும் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்...

 டிடிஎஸ் படிவம்

டிடிஎஸ் படிவம்

கடைசி நாளன்று வரி தாக்கல் செய்யலாமென அலட்சியமாக இருந்துவிட கூடாது.. காரணம், அதிகம் பேர் பயன்படுத்துவதால் வெட்சைட்டிற்குள் நுழைய முடியாத சூழல் ஏற்படலாம்... ஒருவேளை முழு உள்ளீட்டு வரியும், உங்களின் படிவம் 26 AS-ல் வராத பட்சத்தில் வேண்டுமானால், வரி செலுத்துவோர் சிறிதுகாலம் பொறுத்து தாக்கல் செய்யலாம் அல்லது வருமான வரி தாக்கல் அவகாசத்துக்கு முன் பிடித்தம் செய்தோரிடம், விரைந்து தாக்கல் செய்ய கோரிக்கை விடுக்கலாம். டிடிஎஸ் படிவம் தாக்கல் செய்த உடனே தாக்கல் செய்வது அவசியம்...

அபராதம்

அபராதம்

அந்தவகையில், 2021-2022-ம் நிதியாண்டுக்கான, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் கடந்த ஏப்ரலில் ஆரம்பமானது... அபராதமின்றி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், வருகிற 31-ந்தேதியுடன் முடிகிறது.. அதனால், இது தொடர்பாக வரி செலுத்துவோருக்கு விழிப்புணர்வும் வழங்கப்பட்டு வருகிறது. ஒருவேளை, தாமதித்துவிட்டால், அதற்கு பிறகு வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய, வருடத்துக்கு ரூ.5 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோர், ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும்.

விழிப்புணர்வு

விழிப்புணர்வு

ரூ.5 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டுவோர், வருகிற டிசம்பர் வரை ரூ.5 ஆயிரம், ஜனவரி, முதல் மார்ச் வரை, ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும். மார்ச் மாதத்திற்கு பிறகு வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாது. அதனால், அவகாசம் நிறைவடைவதால், கணக்கு தாக்கல் செய்யாதோர், விரைவில் தாக்கல் செய்ய வேண்டும்.. இதுதொடர்பாக வரி செலுத்துவோருக்கு மெசேஜ், இ-மெயில் வாயிலாக விழிப்புணர்வு செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

English summary
income tax: penalty of rs 1000 for non filing of income tax returns after 31st வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதவர்களுக்கு 31-ந் தேதிக்கு பிறகு ரூ.1,000 அபராதம்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X