உங்களுக்கு இன்னும் வருமான வரி ஐடிஆர் ரீபண்ட் வரவில்லையா? இதுதான் காரணம்.. நடந்தது என்ன?
சென்னை: வருமான வரிக்கான ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்தும் உங்களுக்கு இன்னும் வருமான வரி தொகை வரவில்லை அதற்கு பின்வரும் விஷயங்கள் காரணமாக இருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
வருமான வரிக்கான ரிட்டர்ன்ஸ் பலருக்கும் கடந்த வாரங்களில் அனுப்பப்பட்டது. குறித்த நேரத்தில் வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்த பலருக்கும் ரிட்டர்ன்ஸ் கிடைத்துவிட்டது. பலருக்கும் அவர்களின் வங்கி கணக்கில் பணம் போடப்பட்டு வருகிறது. சிலருக்கு வருமான வரி ரிட்டர்ன்ஸ் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான இன்டிமேஷன் அளிக்கப்பட்டுவிட்டது.

விரைவில் அவர்களுக்கு ரீ பண்ட் தொகை அளிக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் சிலருக்கும் வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்தும் இன்னும் ரீ பண்ட் கிடைக்கவில்லை. இதற்கான காரணங்கள் விளக்கப்பட்டு உள்ளன. அதன்படி இன்னும் 14 லட்சம் பேருக்கு வருமான வரி ரிட்டர்ன்ஸ் கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுவரை 2.48 கோடி பேருக்கு ரிட்டர்ன்ஸ் கொடுக்கப்பட்டு உள்ளது.
முதலாவதாக, வருமான வரி ரிட்டன் (ITR) படிவத்தில் உள்ள தவறான அல்லது முழுமையடையாத தகவலே கொடுக்கப்பட்டு இருந்தால் அதுவே வரி திரும்பப் பெறாமல் இருப்பதற்கான முக்கிய காரணமாக இருக்கும். வங்கி விவரங்கள், குடியிருப்பு முகவரி அல்லது மின்னஞ்சல் ஐடி ஆகியவற்றில் ஏதேனும் முரண்பாடு இருந்தால், உங்கள் வரி திரும்பப் பெறுவதில் தாமதம் ஏற்படலாம். எனவே, உங்கள் ஐடிஆர் தாக்கல் செய்யும் போது வழங்கப்பட்ட தகவல்களின் துல்லியத்தை உறுதி செய்வது மிகவும் முக்கியம்.
இதில் கிட்டத்தட்ட 12 லட்சம் ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்துவிட்டு அதை இ வெரிஃபிகேஷன் செய்யாமல் விட்டுள்ளனர். ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்த பின் அதை வெரிஃபிகேஷன் செய்ய வேண்டும். ஆனால் இவர்கள் செய்யவில்லை. இதனால் இவர்களுக்கு இன்னும் பணம் அனுப்பப்படவில்லை. இதையடுத்து இவர்கள் உடனடியாக தங்கள் இ வெரிஃபிகேஷனை செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்யப்படும். இல்லையென்றால் இதில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. முறையாக தாக்கல் செய்து இ வெரிஃபிகேஷன் செய்தவர்களுக்கு ஏற்கனவே ரி பண்ட் சென்றுவிட்டது.
வருமானத்தில் வரி செலுத்துவோரின் கோரிக்கைகளை நிரூபிக்கும் விதமாக சில கூடுதல் ஆவணங்கள் வரி அதிகாரிக்கு தேவைப்படுவதும் உண்டு. உதாரணமாக நீங்கள் லோன் இருக்கிறது என்று சொல்கிறீர்கள்.. ஆனால் உங்கள் கணக்கில் வீட்டு லோனிற்கான ஆதாரங்கள் இல்லையென்றால் அதற்கான ஆதாரங்கள் உங்களிடம் கேட்கப்படும். இதுபோன்ற சமயங்களில், வரி செலுத்துபவருக்கு இவற்றை வழங்குமாறு வரி அலுவலர் கோரிக்கைகளை அனுப்புவார். இவை வரி அதிகாரியால் சரிபார்க்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டவுடன், ரிட்டர்ன் தரப்படும்.
இந்தியாவில் வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்தவர்களின் கிட்டத்தட்ட 12 லட்சம் பேருக்கு பணம் அனுப்பப்படவில்லை இவர்கள் உடனடியாக இ வெரிஃபிகேஷன் செய்ய வேண்டும். வேறு காரணங்களுக்காக கணக்கில் பணம் பெறாதவர்கள் உடனடியாக அந்த தவறுகளை சரி செய்ய வேண்டும். இல்லையென்றால் ஐடி ரிட்டர்ன்ஸ் அவர்களுக்கு நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
எப்படி கண்டுபிடிக்க வேண்டும்?: வருமான வரிக்கான ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்தும் உங்களுக்கு இன்னும் வருமான வரி தொகை வரவில்லை என்றால் பின்வரும் சோதனையை செய்யுங்கள்.
அதன்படி https://www.incometax.gov.in/iec/foportal/ என்ற வருமான வரித்துறை பக்கத்திற்கு செல்லவும். அதில் இன்கம் டேக்ஸ் ரிட்டர்ன் (ITR) ஸ்டேட்டஸ் பக்கத்தில் சென்று உங்கள் லாகின் விவரங்களை கொடுத்து லாகின் செய்யவும்.
இதில் 'இன்கம் டேக்ஸ் ரிட்டர்ன் (ITR) ஸ்டேட்டஸ்' பகுதியை கிளிக் செய்தால் அதில் நீங்கள் வருமான வரி தாக்கல் செய்தது கிரீன் கலரில் இருக்க வேண்டும். அதன்பின் இ வெரிஃபிகேஷன் செய்தது கிரீன் கலரில் இருக்க வேண்டும். கடைசியாக processing மட்டும் கிரீன் ஆகாமல் இருக்கும்.
அப்படி இருந்தால் அதன் அர்த்தம் விரைவில் உங்கள் ரிட்டர்ன் சோதனை செய்யப்பட்டு பணம் கொடுக்கப்படும். ஒருவேளை அதுவும் கிரீன் கலரில் இருந்தும் உங்களுக்கு பணம் வரவில்லை என்றால் உங்கள் மெயிலை சோதனை செய்யவும். அதில், இன்கம் டேக்ஸ் நோட்டிஸ், விளக்கம் கேட்டு மெயில் எதுவும் வந்துள்ளதா என்று பார்க்கவும்.
எவ்வளவு தொகை: ஏப்ரல் 1 முதல் ஆகஸ்ட் 21 வரை வருமான வரித் துறை அதிக அளவு தொகையை கொடுத்துள்ளது. கடைசியாக தாக்கல் செய்த பலருக்கு இந்த வாரம் கொடுக்கப்படும். இதுவரை மட்டும் சுமார் ரூ.72,215 கோடி வரியை வருமான வரித்துறை திருப்பிச் செலுத்தியுள்ளது. தனி நபரை விட நிறுவனங்களுக்கு அதிகமாக கொடுக்கப்பட்டு உள்ளது. கிட்டத்தட்ட 35 ஆயிரம் கோடி ரூபாய் தனி நபர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. அதே சமயம் 37 ஆயிரம் கோடி ரூபாய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications