யாருக்கெல்லாம் பழைய வருமான வரி விதிப்பு முறை இப்போதும் கூட பலன் தரக்கூடும்?
சென்னை: பழைய வருமான வரி விதிப்பு முறையில் வரிச்சலுகை பெற வீட்டுக்கடன், வீட்டு வாடகை, சேமிப்பு எல்லாம் சேர்த்தே அதிக பட்சம் 10 முதல் 12 லட்சம் வரை தான் வருமான வரி கட்டாமல் இருக்க முடியும் என்கிற நிலை உள்ளது. தற்போது 12.75 லட்சம் வரை புதிய வருமான வரி விதிப்பு முறையில் (new regime) பூஜ்யம் வரை என்று மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ள நிலையில், இனி பழைய வருமான வரி முறையில் (old regime) யாருக்கு பயன் இருக்கும் என்ற கேள்வி எழுந்திருக்கும். எனவே பழைய வருமான வரிமுறை இனி தேவையாக இருக்குமா இல்லையா என்று பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட் நடுத்தர வர்க்கத்தினர், அரசு ஊழியர்கள், ஐடி பணியாளர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் புதிய வருமான வரி முறையில் மிகப்பெரிய மாற்றங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதன்படி புதிய வரி விதிப்பு முறையின் கீழ் வரி அடுக்குகள் திருத்தப்பட்டுள்ளது. இந்தநிதியாண்டு முதல் வரி இல்லாத வருமான வரம்பு ரூ.12 லட்சமாக உயர்ந்துள்ளது மேலும் ரூ.75,000 நிலையான விலக்கு தரப்பட்டுள்ளதால், ரூ.12.75 லட்சம் சம்பளம் வாங்குவோர் வரியாக ஒரு ரூபாய் கூட கட்டத்தேவையில்லை..

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் புதிய வருமான வரி முறையில் சலுகை அறிவித்த நிலையில், பரவலாக எதிர்பார்க்கப்பட்ட பழைய வரி முறையில் புதிய மாற்றங்கள் எதுவும் செய்யவில்லை.. எனவே, நிறைய வரி விலக்குகள் வழங்கும் பழைய வருமான வரி விதிப்பு இனிதேவைப்படுமா அல்லது இன்னமும் யாருக்காவது பயன் இருக்குமா என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.
புதிய வரி முறையில் என்ன மாறிவிட்டது: அதை பார்க்கும் முன்பு புதிய வருமான வரி முறையில் என்ன மாறிவிட்டது என்பதை பார்ப்போம். முன்பு, ரூ.7 லட்சம் வரை வருமானம் ஈட்டும் தனிநபர்கள் புதிய வரி விதிப்பின் கீழ் எந்த வரியும் செலுத்த தேவையில்லை. கழிவு தொகையான 75 ஆயிரம் தள்ளுபடி செய்யப்படும் என்பதால். 7.75 லட்சம் வரை சம்பளம் பெறுவோர் வரி கட்ட தேவையில்லை என்பது தான் இப்போது வரை உள்ள நிலையாகும். ஆனால் வரும் நிதியாண்டில் அந்த வரம்பு இப்போது ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. எனவே கழிவுத்தொகை 75 ஆயிரத்தை சேர்த்தால் ரூ.12.75 லட்சம் வரை ஆண்டு சம்பளம் பெறுவோர். புதிய வரி முறையை இனி தாராளமாக தேர்வு செய்யலாம். அவர்கள் ஒரு ரூபாய் கூட வரி செலுத்தாமல் இருக்க முடியும்.
ரூ.12 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கும் கூட, குறைந்த வரி விகிதங்கள் காரணமாக புதிய வரி விதிப்பு மிகவும் பயனுள்ளதாக இனி இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால் பழைய வரி விதிப்பு இன்னும் யாருக்காவது பலன் அளிக்குமா அல்லது பொருத்தமானதாக இருக்குமா என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. என்ன தான் புதிய வருமான வரி பழையதை விட அதிக நன்மை பயக்கும் என்றாலும், அது அவர்கள் செய்துள்ள வீட்டு கடன் உள்பட பல்வேறு வகையான வரிவிலக்கு தொடர்பான முதலீடுகளை பொறுத்து உள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.
பழைய வரி முறையின் கீழ் பார்த்தால், வருமான வரிச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ், பிரிவு 80C (PPF, ELSS, EPF, ஆயுள் காப்பீடு போன்றவற்றில் முதலீடுகளுக்கான விலக்குகளுக்கு மற்றும் HRA (வாடகை செலுத்தும் சம்பளம் பெறும் நபர்களுக்கு) ஆகியவற்றின் கீழ் விலக்குகளை கோர முடியும். ஆனால் புதிய வரி இல்லாத வரம்பு மற்றும் புதிய வரி அடுக்குகள் குறைவாக இருப்பதால், பலர் இந்த விலக்குகள் இல்லாமல் கூட வரி செலுத்த வேண்டியது இல்லை. எனவே 95 சதவீதத்திற்கு மேல் உள்ள மக்கள் புதிய வருமான வரிவிதிப்பு முறையைத்தான்தேர்வு செய்வார்கள்.
அதேநேரம் பழைய வரி முறையின் கீழ் யார் இன்னும் பயனடைய முடியும்?
எளிமையாகச் சொன்னால், பழைய வரி முறை இப்போது அதிக விலக்குகளைக் கொண்ட நபர்களுக்கு அவர்கள் செய்துள்ள முதலீட்டை பொறுத்து பொருத்தமானது என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். வருமான வரி செலுத்துவோருக்கு கணிசமான வீட்டுக் கடன் வட்டி இருந்தால், வரி சேமிப்பு திட்டங்களில் மிகப்பெரிய பெரிய முதலீடுகள் செய்திருந்தால் அல்லது மருத்துவ காப்பீட்டு பிரீமியங்கள் இருந்தால் அவர்கள் பழைய வரி விதிப்பில் தொடர்ந்து இருப்பதன் மூலம் பலன் பெற முடியும்.
யார் எந்த வரி விதிப்பை தேர்வு செய்ய வேண்டும்?
பெரும்பாலான வரி செலுத்துவோருக்கு, புதிய வரி விதிப்பு இப்போது மிகவும் விருப்பமானதாக மாறிவிட்டது. ரூ.12.75 லட்சம் வரை வரி இல்லை. அத்துடன் அதற்கு மேல் சம்பளம் வாங்கினாலும் குறைந்த வரி விகிதங்கள் தான் இருக்கிறது. மேலும் புதிய வரிவிதிப்பு முறை, வரி தாக்கல் செய்வதை எளிதாக்கி உள்ளது. மேலும் தற்போது உள்ள சிக்கலான வரி சேமிப்பு உத்திகளை கடைபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை..
ஆனாலும், பெரிய வீட்டுக் கடன், அதிக மருத்துவ காப்பீட்டு பிரீமியங்கள் அல்லது PPF அல்லது NPS இல் பெரிய முதலீடுகள் போன்ற மிகப்பெரிய முதலீடுகள் செய்து வருமான விலக்கு பெற விரும்புவோருக்கு பழைய வரி விதிப்பு இப்போதும் சாதகமாகவே இருக்க வாய்ப்பு உள்ளது. ஓரளவு லாபம் தரும். ஆனால் பழைய முறை தேர்வு செய்வதற்கு முன்பு இரண்டு வரி விதிப்புகளின் கீழும் உங்கள் வரி பொறுப்பைக் கணக்கிடுவது சிறப்பானதாக இருக்கும்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications