லேகியத்தில் வந்து நிற்கும் சண்டை! பாஜகவை இறங்கி அடிக்கும் அதிமுக! அரசியல் அட்டென்ஷன்!
சென்னை: பாஜகவை கூட்டணியிலிருந்து கழற்றிவிட்டாலும் அக்கட்சி குறித்தோ, அக்கட்சியின் தலைவர்கள் குறித்தோ வாயே திறக்காமல் மவுனம் சாதித்து வந்த அதிமுக இப்போது திடீரென இறங்கி அடிக்க ஆரம்பித்திருக்கிறது.
அண்ணாமலையை லேகியம் விற்பவரோடு ஒப்பிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று கிண்டல் அடித்துள்ளார். கவுன்சிலராக கூட ஜெயிக்காத அண்ணாமலைக்கு அரசியல் பக்குவம் கிடையாது எனவும் அனல் கக்கினார் ஆர்.பி. உதயகுமார். இது வரை அதிமுக -பாஜக இடையே நீறு பூத்த நெருப்பாக இருந்து வந்த பகை, சில நாட்களாக கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியுள்ளது. பாஜக மீதான அதிமுகவின் இந்த திடீர் பாய்ச்சல் பின்னணியில் ஒரு காரணம் கூறப்படுகிறது.

வயதான காலத்தில் செவனேன்னு வீட்டில் இருந்த அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களை பாஜக பக்கம் அழைத்துச் சென்று அரசியல் அட்டென்ஷன் பெற்றார் அண்ணாமலை. அது ஒரு நாள் அட்டென்ஷன் என்றாலும், அதிமுக தலைமைக்கு மறைமுகமாக விடுக்கப்பட்ட எச்சரிக்கை நிகழ்வாகவே கருதப்படுகிறது. இன்று முன்னாள், நாளை இந்நாளாக கூட இருக்கலாம் என்பது தான் அந்த நிகழ்வில் ஒளிந்துள்ள சூட்சுமம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் தான் இனியும் மவுனம் சாதித்தால் வேலைக்கு ஆகாது என பாஜகவையும், குறிப்பாக அண்ணாமலையையும் இறங்கி அடிக்க ஆரம்பித்துள்ளது அதிமுக.
பாஜகவும் லேகியம் விவகாரத்தை லேசில் விடுவதாக இல்லை. அண்ணாமலை மீதான ஆர்.பி.உதயகுமாரின் விமர்சனத்துக்கு பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் சுடச்சுடப் பதிலடி கொடுத்துள்ளார். ஊழல் நோயை விரட்டும் லேகியத்தை அண்ணாமலை விற்கிறார் என அதிமுகவுக்கு கே.பி.ராமலிங்கம் பதில் கொடுத்துள்ளார். பாஜகவுடன் அதிமுக மறைமுக கூட்டணி வைத்திருப்பதாகவும், எடப்பாடி பழனிசாமியை சிறுபான்மை சமுதாய மக்கள் நம்பக்கூடாது எனவும் திமுக, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் குற்றஞ்சாட்டிய நிலையில், அந்தக் குற்றச்சாட்டையும் பொய் என நிரூபிப்பதற்காக பாஜக மீது பாயத் தொடங்கியுள்ளது அதிமுக.
இப்போது தான் ஆரம்பம் இனி வரும் நாட்களில் அதிமுக -பாஜக இடையேயான வார்த்தை யுத்தம் இன்னும் அதிகரிக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஒரு காலத்தில் ஒன்றுக்கு ஒன்றாக கண்ணுக்கு கண்ணாக என இருந்த இரண்டு கட்சிகளும் இப்போது குடுமி பிடி சண்டை போடத் தொடங்கியுள்ளது. பாஜகவுடன் எடப்பாடி பழனிசாமி மோதுவதை சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகிய மூவர் தரப்பு ரசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதில் கவனிக்க வேண்டிய விவகாரம் என்னவென்றால், பிரதமர் மோடி குறித்து எடப்பாடி பழனிசாமியோ அல்லது அதிமுக முன்னாள் அமைச்சர்களோ இது நாள் வரை ஒரு வார்த்தை விமர்சித்தது கிடையாது. அண்ணாமலையையும், தமிழக பாஜக நிர்வாகிகளையும் தான் அதிமுக வெளுத்து வாங்குகிறது.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications