கொரோனா பாதிப்புக்கு பிறகு மாரடைப்பு, நீரிழிவு ஏற்படும் அபாயம் அதிகரிப்பு.. சவுமியா சுவாமிநாதன்
சென்னை: உலக சுகாதார் அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கொரோனா தாக்கம் காரணமாக தடுப்பூசி செலுத்திய பிறகு மாரடைப்பு, நீரிழிவு , பக்கவாதம் போன்ற நோய்களின் பாதிப்பு 4 முதல் 5 சதவிகிதம் அதிகரித்ததாக தெரிவித்துள்ளார்.
சீனாவின் உகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் முதன் முதலாக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது.
அடுத்த சில மாதங்களில் இந்த வைரஸ் ஒட்டு மொத்த உலகத்திற்கும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. கொரோனா பாதிப்பால் பல ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள், பொருளாதார பாதிப்பு என எண்ணற்ற பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டது.

கொரோனா வைரஸ் பரவல்
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த போடப்பட்ட பொதுமுடக்கத்தால் மக்கள் வீடுகளுக்குள் முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், மனதளவிலும் மக்களை கடுமையாக பாதிக்கப்படக் கூடியதாக கொரோனா பெருந்தொற்று மாறிப்போனது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு அதிக அளவில் தடுப்பூசிகள் போடத் தொடங்கிய பிறகே வைரசின் வீரியம் குறையத்தொடங்கியது. கொரோனா வைரஸ் பரவலின் வேகமும் தணியத்தொடங்கிய பிறகு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

மாரடைப்பு, நீரிழிவு , பக்கவாதம்
சுமார் 2 ஆண்டுகளாக கடும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் பரவல் தற்போது குறைந்து இயல்பு நிலை திரும்பியுள்ளது. இந்த நிலையில், டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த உலக சுகாதார் அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் கொரோனா தாக்கம் காரணமாக தடுப்பூசி செலுத்திய பிறகு மாரடைப்பு, நீரிழிவு , பக்கவாதம் போன்ற நோய்களின் பாதிப்பு 4 முதல் 5 சதவிகிதம் அதிகரித்ததாக தெரிவித்துள்ளார்.

4 முதல் 5 சதவிகிதம் அதிகரித்துள்ளது
இது தொடர்பாக அவர் கூறும் போது, கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இந்த எதிர்ப்பு சக்தியை கடக்கூடிய அளவுக்கு வைரைஸ் மாறுபாடு அடையும் சிறு ஆபத்து உள்ளது. எனவே, மாரடைப்பு, நரம்பு மண்டல செயல் இழப்பு போன்ற பல கொடிய நோய்களுக்கு கொரோனாவிற்கு பிந்தைய பாதிப்பு காரணமாக இருக்கலாம். கொரோனா பெருந்தொற்றுக்கு பின் இது 4 முதல் 5 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இவற்றை தொடர்ந்து கண்காணிப்பது அவசியமான ஒன்றாகும்" என்று கூறினார்.

மாஸ்க் போட்டுக்கொள்வது நல்லது
முன்னதாக செளமியா சுவாமிநாதன் "மாஸ்க் அணிவதை பொருத்தவரை இப்போது அனைவருக்கும் கொரோனா எதிர்ப்பு சக்தி நன்றாக இருப்பதால் தீவிர கட்டுப்பாடுகள் தேவையில்லை. காய்ச்சல் , ஜூரம், இருமல் வந்தால் மாஸ்க் போட்டுக்கொள்வது நல்லது. மாஸ்க் போடாமல் இருமினால் எந்த நோயாக இருந்தாலும் பரவ வாய்ப்புள்ளது. மாஸ்க் போடுவது சுவாசம் சம்பந்தப்பட்ட வைரஸ்கள் பரவுவதை தடுக்க உதவும். எனவே மாஸ்க் போடுவதை ஒரு பழக்கமாக கொள்வது நல்லதுதான். குறிப்பாக சில இணைநோய்கள் இருப்பவர்கள் மாஸ்க் அணிவது வெளியில் செல்வது அவர்களுக்கு நல்லது" இவ்வாறு அவர் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications