தமிழகத்தில் 15 போலீஸ் அதிகாரிகளுக்கு தங்க பதக்கம்.. சுதந்திர தினத்தையொட்டி அறிவிப்பு.. ஸ்டாலின் வழங்குகிறார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தான் தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களை பாராட்டும் வகையில் சுதந்திர தினத்தையொட்டி சிறப்பு தங்கப்பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 15 காவல் அதிகாரிகளுக்கு இந்த பதக்கம் வழங்கப்பட உள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 2025ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்கள் வழங்கப்பட உள்ளது.

police award tamil nadu

புலன் விசாரணை பணியில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் கீழ்கண்ட 10 காவல்துறை அதிகாரிகள் 2025ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்பு பணிப் பதக்கங்கள் வழங்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

* க.த.பூரணி - காவல் துணை கண்காணிப்பாளர் - சைபர் கிரைம் பிரிவு - குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை - சென்னை

* பி.உலக ராணி - காவல் ஆய்வாளர் - குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை - திருநெல்வேலி

* மா. லதா - காவல் ஆய்வாளர் - கடத்தல் தடுப்பு பிரிவு - குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை - சென்னை

* மு . செந்தில் குமார் - காவல் ஆய்வாளர் - மகுடஞ்சாவடி காவல் நிலையம் - சேலம் மாவட்டம்

* ஜெ. கல்பனாதத் - துணை காவல் கண்காணிப்பாளர் - குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை - தஞ்சாவூர்

* வே. சந்தான லட்சுமி - காவல் ஆய்வாளர் - குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை - திண்டுக்கல்

* மா. வசந்த குமார் - காவல் ஆய்வாளர் - பெருமாநல்லூர் காவல் நிலையம் - திருப்பூர் மாவட்டம்

* வெ. ஜெகநாதன் - காவல் ஆய்வாளர் - வடக்கு காவல் நிலையம் - திருப்பூர் மாநகரம்

* கோ. திலகாதேவி - காவல் ஆய்வாளர் - குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை - அரியலூர்

* இரா. புவனேஸ்வரி - காவல் ஆய்வாளர் - குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை - நாகப்பட்டினம்

இதேபோன்று பொதமக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய கீழ்கண்ட 5 காவல்துறை அதிகாரிகளுக்கு 2025-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர்களது பணியை பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் வழங்க தேர்ந்தெடுக்கப்பட்டள்ளார்கள்.

* முனைவர் - மஹேஷ்வர் தயாள் - கூடுதல் காவல்துறை இயக்குநர் மற்றும் சிறைகள் மற்றும் சீர்த்திருத்த பணிகள் துறை தலைமை இயக்குநர் -சென்னை

* ஜெ. மகேஷ் - காவல்துறை துணை தலைவர் - நுண்ணறிவு (உள்நாட்டு பாதுகாப்பு) - சென்னை

* நை. சிலம்பரசன் - காவல் கண்காணிப்பாளர் - திருநெல்வேலி மாவட்டம்

* கு. பிரவீன் குமார் - கூடுதல் காவல் கண்காணிப்பாளர் - தனிப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை - தலைமையகம் - சென்னை

* தா. மேரி ரஜு - காவல் ஆய்வாளர் - சென்னை பெருநகர காவல்துறை

விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா 8 கிராம் எடையுடன் கூடிய தங்கப்பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். மேற்கண்ட விருதுகள் தமிழ்நாடு முதலமைச்சரால் பிறிதொரு விழாவில் வழங்கப்படும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+