முதல்வர் எடப்பாடியின் சொந்த ஊருக்கு பெருமை.. சிறந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்கு விருது
சென்னை: சென்னை கோட்டையில் நடந்த சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதலமைச்சர் விருதுகளை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.
சிறந்த மாநகராட்சிக்கான விருது சேலம் மாநகராட்சிக்கு வழங்கப்பட்டது
சிறந்த நகராட்சிக்கான விருதில் முதல் பரிசு தர்மபுரிக்கும் இரண்டாம் பரிசு, வேதாரண்யத்துக்கும், மூன்றாம் பரிசு அறந்தாங்கிக்கும் வழங்கப்பட்டது.

.சிறந்த பேரூராட்சிக்கான விருதில் முதல் பரிசு மதுரை மாவட்டம் டி கல்லுப்பட்டிக்கும், இரண்டாம் பரிசு திருவாரூர் மாவட்டம் நன்நிலத்துக்கும், மூன்றாம் பரிசு ஈரோடு மாவட்டம் பவானிசாகருக்கும் வழங்கப்பட்டது
சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கான விருது சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பெற்றது.
இந்த விழாவில் எடப்பாடியின் சொந்த மாவட்டமான சேலத்திற்கு தான் சிறந்த மாநகராட்சிக்கான விருது கிடைத்துள்ளது. இதேபோல் சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கான விருது சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications