என்னா மனுஷன்யா.. டெபாசிட் இழக்காத ஒரே சுயேச்சை.. ஹரி நாடார்தான்.. அதிக வாக்குகள் பெற்றவரும் அவரே!
சென்னை: டெபாசிட் இழக்காத ஒரே சுயேச்சை வேட்பாளர் ஆலங்குளத்தில் போட்டியிட்ட பனங்காட்டுப் படை கட்சியின் தலைவர் ஹரிநாடார் ஆவார். இவர் அதிக வாக்குகளை பெற்ற சுயேச்சைகளின் பட்டியலிலும் சிறப்பிடம் பெற்றுள்ளார்.
கொரோனாவுக்கு மத்தியில் தமிழக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. சென்னையில் மட்டும் 72.81 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். அதாவது 4.6 கோடி பேர் வாக்களித்துள்ளனர்.
இந்த தேர்தல் 107 கட்சிகளும் 2073 சுயேச்சைகளும் களமிறங்கினர். கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலை காட்டிலும் தற்போது இந்த எண்ணிக்கை அதிகமே.

இணையதளம்
இதில் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து சில தகவல்கள் எடுக்கப்பட்டன. அதில் சுயேச்சைகளே போட்டியிடாத தொகுதிகளாக பவானிசாகர் தொகுதி உள்ளது. அது போல் அதிக எண்ணிக்கை அதாவது 77 சுயேச்சைகள் போட்டியிட்ட தொகுதியாக கரூர் தொகுதி உள்ளது.

3 வாக்குகள்
அதில் 19 பேர் ஒற்றை இலக்கத்தில் ஓட்டு வாங்கியவர்கள். இதில் சுயேச்சைகள் சக்திகுமார், செந்தில், மணிகண்டன் ஆகிய மூன்று தலா இரு வாக்குகளை வாங்கியுள்ளனர். அது போல் புஷ்பராஜ், மணிவண்ணன் ஆகிய இருவர் தலா 3 வாக்குகள் வாங்கியுள்ளனர்.

ஹரி நாடார்
இந்த நிலையில் அதிக வாக்குகளை பெற்ற சுயேச்சை வேட்பாளர்கள் பட்டியலில் ஆலங்குளம் வேட்பாளர் ஹரி நாடார் முதலிடத்தில் உள்ளார். இவர் பனங்காட்டு படை கட்சியின் தலைவர். இவர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 37,727 ஆகும். அந்த தொகுதியில் கிடைத்த வாக்குகளில் இவர் பெற்றது 18.54 சதவீதமாகும்.

திமுக, அதிமுக
ஒரு கட்டத்தில் ஆலங்குளத்தில் அதிமுகவின் மனோஜ் பாண்டியன், திமுகவின் பூங்கோதை ஆலடி அருணா ஆகியோருக்கு போட்டியாக தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தாராம். பின்னர் பல சுற்றுகளின் முடிவில் அதிமுகவின் மனோஜ் பாண்டியன் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

டெபாசிட் இழக்காத வேட்பாளர்
ஹரிநாடாருக்கு அடுத்து சமூகநீதி கூட்டமைப்பின் புதுக்கோட்டை வேட்பாளர் பாலகிருஷ்ணன் 23,771 வாக்குகள் பெற்றுள்ளார். பின்னர் வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் திருமயம் வேட்பாளர் செல்வக்குமார் 15144 வாக்குகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். சுயேச்சைகளில் டெபாசிட் தொகை இழக்காதே ஒரே வேட்பாளர் ஹரிநாடார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications