பாரத் என்று பெயர் வைத்ததும்.. "இந்தியா" பெயரை தூக்க திட்டமிடும் பாகிஸ்தான்? மாஸ்டர் பிளான்? ஏன்?
சென்னை: இந்தியாவின் பெயரை மாற்றினால் சர்வதேச அளவில் இந்தியாவின் பெயருக்கு பாகிஸ்தான் உரிமை கோரும் வாய்ப்பு உள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த கூட்டம் மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில்தான் இவர்கள் கலந்து கொண்ட கூட்டம் நேற்று மும்பையில் நடந்தது. மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி, சரத் பவார், ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களும் மும்பையில் கிராண்ட் ஹயாத் ஹோட்டலில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த கூட்டம் மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில்தான் இவர்கள் கலந்து கொண்ட கூட்டம் நேற்று மும்பையில் நடந்தது. மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி, சரத் பவார், ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களும் முமபையில் கிராண்ட் ஹயாத் ஹோட்டலில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்தியா கூட்டணிக்கு நாளுக்கு நாள் மக்களுக்கான ஆதரவு கிடைக்க தொடங்கி உள்ளது. இந்தியா கூட்டணி மக்கள் இடையே கவனம் பெற தொடங்கி உள்ளது. மோடி vs இந்தியா என்ற வாதமும் எழுந்துள்ளது. இந்த நிலையில்தான் இந்தியா கூட்டணிக்கு செக் வைக்கும் விதமாக 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாவை மத்திய அரசு செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. இந்த நிலையில் இந்தியா கூட்டணி கவனம் பெற்றுள்ளதால், இந்தியாவின் பெயர் பாரத குடியரசு என்று மாற்றப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய பாஜக அரசு இதற்கான திட்டங்களில் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. பாரத குடியரசுத்தலைவர் என குடியரசுத்தலைவர் மாளிகை அழைப்பிதழ் அளித்துள்ளதும் இந்த விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜி.20 மாநாட்டில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு அழைப்பிதழில் பாரத குடியரசுத்தலைவர் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
வரும் செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்ட தொடர் நடக்க உள்ளது. இந்த நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத் தொடரில் பாரத குடியரசு என மாற்றப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
பாஜக திட்டம்: இந்தியாவின் பெயர் பாரத குடியரசு என்று மாற்றப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. நேற்றில் இருந்து இந்தியா முழுக்க இது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. நாடாளுமன்றத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முதல் சட்டத்தை சீர்திருத்தி இந்தியா என்பதை நீக்கி வெறும் பாரத் என்பதை பயன்படுத்த முடிவு எடுக்கப்படலாம். இப்போது இந்தியா, அதாவது பாரத் என்று உள்ளது. இதை இந்தியா என்று மட்டும் மாற்ற பாஜக அரசு முடிவு செய்யலாம் என்று கூறப்படுகிறது.
பாகிஸ்தான் பிளான்: இந்த நிலையில்தான் இந்தியாவின் பெயரை மாற்றினால் சர்வதேச அளவில் அது பதிவு செய்யப்படும். உதாரணமாக ஐநாவில் இதை பதிவு செய்ய வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் இந்தியாவின் பெயருக்கு பாகிஸ்தான் உரிமை கோர முயலும் என்கிறார்கள்.
இந்தியாவின் பெயர் பாரத் ஆன பின் மீண்டும் அதை இந்தியா என்று மாற்றாமல் தடுக்க வசதியாக இந்த நடவடிக்கையை பாகிஸ்தான் எடுக்கும் என்கிறார்கள். ஏற்கனவே இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றுவது சரியா தவறா என்பதையெல்லாம் தாண்டி.. இந்த பெயர் மாற்றம் மூலம் பாகிஸ்தானை உருவாக்கிய முகமது அலி ஜின்னாவின் பல ஆண்டு கனவு நிறைவேற்றப்படும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அத்வைத் என்ற வரலாற்று ஆய்வாளர் கூறுகையில், 1947 இல், முகமது அலி ஜின்னா 'இந்தியா' என்ற பெயரை எதிர்த்தார், அவருடைய கருத்துப்படி, 'இந்தியா' முழு துணைக்கண்டத்தையும் உள்ளடக்கியது. அதாவது சிந்து சமவெளி உட்பட எல்லா பகுதியையும் உள்ளடக்கியதே இந்தியா. இண்டஸ் வேலி பகுதி முழுக்கவே இந்தியா. அதனால் இந்தியாவிற்கு இந்தியா என்று வைக்க கூடாது.
ஜின்னா 'இந்துஸ்தான்' என்ற பெயரை பரிந்துரைத்தார், ஆனால் நேரு இந்த திட்டத்தை நிராகரித்து நமது தேசத்திற்கு 'இந்தியா' என்று பெயரிட்டார். 76 ஆண்டுகளுக்குப் பிறகு ஜின்னாவின் விருப்பத்தை பாஜக நிறைவேற்றுகிறது என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.
இந்த நிலையில்தான் இந்தியாவின் பெயரை மாற்றினால் சர்வதேச அளவில் இந்தியாவின் பெயருக்கு பாகிஸ்தான் உரிமை கோரும் வாய்ப்பு உள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications