Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாரத் என்று மாறும் இந்தியா? நிறைவேறுகிறது பாகிஸ்தான் "ஜின்னா"வின் பல ஆண்டு கனவு.. ஷாக்கிங் பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றுவது சரியா தவறா என்பதெல்லாம் தாண்டி.. இந்த பெயர் மாற்றம் மூலம் பாகிஸ்தானை உருவாக்கிய முகமது அலி ஜின்னாவின் பல ஆண்டு கனவு நிறைவேற்றப்படும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றுவதுதான் தற்போது ஹாட் டாப்பிக். இணையம் முழுக்க இது கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் பெயர் பாரத குடியரசு என்று மாற்றப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. நேற்றில் இருந்து இந்தியா முழுக்க இது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. நாடாளுமன்றத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முதல் சட்டத்தை சீர்திருத்தி இந்தியா என்பதை நீக்கி வெறும் பாரத் என்பதை பயன்படுத்த முடிவு எடுக்கப்படலாம். இப்போது இந்தியா, அதாவது பாரத் என்று உள்ளது. இதை இந்தியா என்று மட்டும் மாற்ற பாஜக அரசு முடிவு செய்யலாம் என்று கூறப்படுகிறது.

India becomes Bharat: Why did Muhammad Ali Jinnah objected to the name India?

மத்திய பாஜக அரசு இதற்கான திட்டங்களில் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. பாரத குடியரசுத்தலைவர் என குடியரசுத்தலைவர் மாளிகை அழைப்பிதழ் அளித்துள்ளதும் இந்த விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜி.20 மாநாட்டில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு அழைப்பிதழில் பாரத குடியரசுத்தலைவர் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்ட தொடர் நடக்க உள்ளது. இந்த நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத் தொடரில் பாரத குடியரசு என மாற்றப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. செப்டம்பர் 18 - 22 வரை இந்த சிறப்பு கூட்டம் நடக்க உள்ளது. இந்த சிறப்பு கூட்டத்தில் என்ன விவாதிக்கப்படும் என்ற தகவல் வெளியாகவில்லை.

இப்படிப்பட்ட நிலையில்தான் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று(செப்.6) நடைபெறுகிறது. இந்தியாவின் பெயரை மாற்றுவது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

ஜின்னாவின் கனவு: இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றுவது சரியா தவறா என்பதையெல்லாம் தாண்டி.. இந்த பெயர் மாற்றம் மூலம் பாகிஸ்தானை உருவாக்கிய முகமது அலி ஜின்னாவின் பல ஆண்டு கனவு நிறைவேற்றப்படும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அத்வைத் என்ற வரலாற்று ஆய்வாளர் கூறுகையில், 1947 இல், முகமது அலி ஜின்னா 'இந்தியா' என்ற பெயரை எதிர்த்தார், அவருடைய கருத்துப்படி, 'இந்தியா' முழு துணைக்கண்டத்தையும் உள்ளடக்கியது. அதாவது சிந்து சமவெளி உட்பட எல்லா பகுதியையும் உள்ளடக்கியதே இந்தியா. இண்டஸ் வேலி பகுதி முழுக்கவே இந்தியா. அதனால் இந்தியாவிற்கு இந்தியா என்று பெயர் வைக்க கூடாது.

ஜின்னா 'இந்துஸ்தான்' என்ற பெயரை பரிந்துரைத்தார், ஆனால் நேரு இந்த திட்டத்தை நிராகரித்து நமது தேசத்திற்கு 'இந்தியா' என்று பெயரிட்டார். 76 ஆண்டுகளுக்குப் பிறகு ஜின்னாவின் விருப்பத்தை பாஜக நிறைவேற்றுகிறது என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.

சசி தரூர்: காங்கிரஸ் எம்பி சசி தரூர் இது பற்றி கூறுகையில், ஜின்னா தான் 'இந்தியா' என்ற பெயரை எதிர்த்தார். பிரிட்டிஷாரை வென்ற நாடு நமது நாடு என்றும், பிரிந்து செல்லும் நாடு பாகிஸ்தான் என்றும் பெயர் வரும் என்பதற்காக அவர் இதை எதிர்த்தார்.. சிஏஏவைப் போலவே, பாஜக அரசும் ஜின்னாவின் கருத்தை ஆதரிக்கிறது, என்று விமர்சனம் செய்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+